பொங்கல் பண்டிகை: தென் மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் 1 மணிநேரத்தில் முடிந்தன!
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிவடைந்தன.
பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2024-ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாட்டம் களைகட்ட இருக்கிறது.

பொங்கல் பண்டிகைகள் ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால் ஜனவரி 12-ந் தேதி வெள்ளிக்கிழமையே வழக்கம் போல சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் செல்வர். டிக்கெட் முன்பதிவுகளை வீட்டில் இருந்தபடியே https://www.irctc.co.in/nget/இணையதளம் அல்லது டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களில் பதிவு செய்யலாம்.
இதன்படி இன்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11-ந் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்; நாளை முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12-ந் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. ஆனால் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே அதாவது காலை 9 மணிகே தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவுகள் முடிவடைந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications