Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயோ ஓட்டலாக மாறிய ரயிலின் கழிப்பறை.. யார் இவர்கள்? பாத்ரூம் கண்ணாடியில் பார்த்து ஆடிப்போன பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணம் என்பது பயணிகளுக்கு வசதியானதாக மட்டுமல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. உணவு முதல் கழிப்பறை வரை பல்வேறு வசதிகள் ரயிலில் கிடைக்கிறது. எனினும், ஒருசிலர் ரயில்களை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்தி கொள்வதுடன், முகம் சுழிக்கும் வகையிலும் நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இப்போதுகூட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

புகழ்பெற்ற ஓயோ (OYO) ஓட்டலானது, மற்ற ஓட்டல்களைவிட, குறைந்த வாடகையில் ரூம்கள் வழங்கப்படுகின்றன.. இங்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகமாக உள்ளதால்தான், ஏராளமான இளஞ்ஜோடிகள் இந்த ஓட்டலை தேர்ந்தெடுக்கிறார்கள்.

OYO hotels Trains Toilet Mirror

அதுமட்டுமல்ல, ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஓட்டல்களில் போலீசார் வாரண்ட் இல்லாமல் ரெய்டு நடத்த முடியாது.. அப்படி செய்தால், அது மனித உரிமை மீறலாகவே கருதப்படும்.. அதிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்யவும் முடியாது.. அதனால்தான் ஒருசிலர் இந்த ஓயோ ஓட்டல்களை தங்களுக்கு சாதகமாகவும், முறைகேடாகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

ஓயோ ஓட்டல்கள்

4 நாட்களுக்கு முன்பு, ஓயோ (OYO) உள்ளிட்ட எந்த ஹோட்டலிலும் செக்-இன் செய்யும்போது ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் அல்லது புகைப்பட நகலை கொடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை என்று விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தது வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், சமீபகாலமாகவே ரயில்களில் நடக்கும் சில சம்பவங்களை பார்த்தாலே கவலையும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.. சில இளஞ்சோடிகள் OYO ஓட்டல் ரூம்களை போலவே ரயில் கழிவறையையும் பயன்படுத்தி வருகிறார்கள்..

ரயில்வே பாத்ரூம்கள்

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கழிவறைக்குள் சென்று பயணிகளை முகம் சுழிக்க வைத்து விடுகிறார்கள்.. ரயில் பயணங்களில் கழிவறையில் புகுந்து கொண்டு நீண்ட நேரம் இந்த ஜோடிகள் வெளியே வர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.. சமீபத்தில்கூட, இளம் ஜோடி ஒன்று ரயில் கழிவறையில் இருந்து வெளியேறும் காட்சியை பயணி ஒருவர் வெளியிட்டிருந்தார்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இதன் பெயர் காதல் கிடையாது.. இன்றைய இளைஞர்கள் தற்காலிக சுகத்துக்காக வாழ்க்கையையே கெடுத்துக்கொள்கிறார்கள். ரயிலையே ஓயோவாக மாற்றிவிட்டார்களே? என்று கடுமையாக கடிந்து கொண்டிருந்தனர்..

ஒருசில இணையவாசிகள், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டதே தவறு.. தனியுரிமை மீறப்படக் கூடாது என்றும் கருத்து பதிவிட்டிருந்தனர்.

ரயில் கழிப்பறை கண்ணாடி

இதோ சோஷியல் மீடியாவில் இன்னொரு வீடியோ வேகமாக பரவி கொண்டிருக்கிறது.. அதில் ரயில் கழிவறையில் இளம் ஜோடி ஒன்று உள்ளே செல்கிறார்கள்.. இருவரும் தகாத செயல்களில் ஈடுபடுவது, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்துள்ளது.. இதைப்பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

சிறிது நேரம் கழித்து முதலில் அந்த பெண் வெளியே வரவும், பிறகு இளைஞன் வெளியே வருகிறார்.. இந்த காட்சிகள் அருகில் வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

OYO hotels Trains Toilet Mirror

ரயில்வேவுக்கு பயணிகள் கோரிக்கை

இதை பார்த்த பலரும், ரயில் பாத்ரூமை ஓயோ ஓட்டலாகவே மாற்றிவிட்டீர்களா? பொது இடங்களில் இப்படியான செயல்கள் தவறு என்று ரயில்வே எச்சரித்தும் செவிமடுக்கிறார்களே? என்று நொந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் சிலர், "இந்த வீடியோ இப்போது எதற்காக? இது உண்மையா என்று தெரியவில்லை.. லைக்ஸ்களை பெறுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விளம்பர யுக்தியாகவும் இருக்கலாம்" என்று பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும் சிலர், "ரயில்வே நிர்வாகம் தன்னுடைய கண்காணிப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மொத்தத்தில், இந்த வீடியோ உண்மையா, பொய்யா என்றே தெரியாமல் லட்சக்கணக்கான வியூவ்ஸ்களை பெற்று செல்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+