Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயோ ஹோட்டலாக மாறிய ரயிலின் ஸ்லீப்பர் கோச்.. அத்தனை பேர் சுற்றியிருக்க.. யாரிந்த ஜோடி? வீடியோ வேற

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணம் வசதியானது மட்டுமல்லாமல் பாதுகாப்பானதும்கூட.. நடுத்தர, மற்றும் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் டிக்கெட் உள்ளதுடன், உணவு முதல் கழிப்பறை வரை பல்வேறு வசதிகள் ரயிலில் கிடைக்கிறது. எனவேதான், தினந்தோறும் மில்லியன் கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பொதுமக்களின் வசதிக்காகவே, 13,000 ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.. எனினும், ஒருசிலர் ரயில்களை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்தி கொள்வதுடன், முகம் சுழிக்கும் வகையிலும் நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது. தற்போதுகூட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகழ்பெற்ற ஓயோ (OYO) ஹோட்டலானது, மற்ற ஹோட்டல்களைவிட, குறைந்த வாடகையில் ரூம்கள் வழங்கப்படுகின்றன.. இங்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகமாக உள்ளதால்தான், ஏராளமான இளஞ்ஜோடிகள் இந்த ஹோட்டலை தேர்ந்தெடுக்கிறார்கள்.

OYO hotels Trains Sleeper Coach

அதுமட்டுமல்ல, ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஹோட்டல்களில் போலீசார் வாரண்ட் இல்லாமல் ரெய்டு நடத்த முடியாது.. அப்படி செய்தால், அது மனித உரிமை மீறலாகவே கருதப்படும்.. அதிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்யவும் முடியாது.. இவ்வளவு பிளஸ் பாயிண்ட்கள் இருப்பதால்தான், ஒருசிலர் இந்த ஓயோ ஹோட்டல்களை தங்களுக்கு சாதகமாகவும், முறைகேடாகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

ஒரிஜினல் அடையாள சான்றிதழ்கள்

திருமணமாகாத 18 வயதுக்குட்பட்டவர்கள், ஓயோ ரூம்களை தவறாக பயன்படுத்துவது கலாச்சார சீர்கேட்டை உண்டாக்கிவிடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் ஓயோ தங்கும் ரூம்களின் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன..

அதன்படி திருமணமாகாத ஜோடிகளுக்கு ஓயோ ஹோட்டல்களில் அனுமதி கிடையாது, ஆன்லைனில் புக்கிங் செய்தாலும், ஹோட்டலுக்கு தங்க வரும் தம்பதிகள், தங்களது உறவின் ஆதாரத்தை வழங்கினால்தான், ரூம் கன்பார்ம் செய்யப்படும்.

ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை மட்டுமே அடையாள சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படும்... அதுவும், அடையாள அட்டையின் அசல் மட்டுமே கொண்டுவர வேண்டும்" என்றெல்லாம் ரூல்ஸ்கள் போடப்பட்டன.. அப்படியிருந்தும், ஓயோ ஓட்டல்களில் ஆங்காங்கே முறைகேடுகள் நடக்கத்தான் செய்கின்றன.

ரயில்களே ஓயோ ஓட்டல்

இந்நிலையில், சமீபகாலமாகவே ரயில்களில் நடக்கும் நடந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்த பயணிகளையும் முகம் சுழிக்க வைத்து வருகிறது.. இளஞ்சோடிகள் OYO ஓட்டல் அறைகளுக்கு செல்வது வழக்கமாகி வரும் நிலையில், தற்போது ரயில் கழிவறையையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசத்தில் ஈடுபடும் சிலர், ரயில் பயணங்களில் கழிவறையில் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.. சமீபத்தில்கூட, இளம் ஜோடி ஒன்று ரயில் கழிவறையில் இருந்து வெளியேறும் காட்சியை பயணி ஒருவர் வெளியிட்டிருந்தார்.

ரயில் பாத்ரூம்

அதாவது அந்த ரயிலின் பாத்ரூமிலிருந்து முதலில் இளைஞன் வெளியே வந்த காட்சியும், பிறகு சிறிது நேரம் கழித்து இளம்பெண் வெளியே வந்த காட்சியும் பதிவாகியிருந்தது..

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இதன் பெயர் காதல் கிடையாது.. இன்றைய இளைஞர்கள் தற்காலிக சுகத்துக்காக வாழ்க்கையையே கெடுத்துக்கொள்கிறார்கள். ரயிலையே ஓயோவாக மாற்றிவிட்டார்களே? என்று கடிந்து கருத்து கூறியிருந்தனர்.

அதேசமயம் சிலர், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டதே தவறு.. தனியுரிமை மீறப்படக் கூடாது என்று கமெண்ட்களை பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஸ்லீப்பர் கோச்சில் ஜோடி

இந்நிலையில், @divyakumaari என்பவரது அக்கவுண்ட்டிலிருந்து, மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. அந்த வீடியோவில், ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில், ஒரு பெண்ணின் மீது ஆண் படுத்துக் கொண்டு முத்தம் தந்து வருகிறார்.. அந்த பெண்ணும் அந்த நபரின் தலைமுடியை கோதிவிடுகிறார். இவ்வளவும் அங்குள்ள பயணிகள் முன்பு நடந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வெட்கமாக இல்லையா? ரயிலையே ஓயோ ஹோட்டலாக மாற்றிவிட்டார்களா? என்று கேட்டு வருகின்றனர்.. மேலும் சிலர் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் இவர்களை உடனே போலீசில் ஒப்படையுங்கள், இதுபோன்றவர்களால்தான் அசுத்தம் பரவுகிறது என்றும் சாடி வருகிறார்கள்..

ஸ்லீப்பர் பெட்டிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தில் தனிப்பட்ட இடத்தை பயணிகள் மதிப்பது மிகவும் முக்கியம் என்று ரயில்வே அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ள போதிலும், தொடர்ந்து சிலர் இவ்வாறு செய்வது, அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+