டானா புயல்.. தமிழகத்திலிருந்து புறப்பட இருந்த, வந்து சேர வேண்டிய 28 ரயில்கள் ரத்து!
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இது நாளை தீவிர புயலாக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய, இங்கிருந்து புறப்பட வேண்டிய என மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் காலங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் வங்கக்கடலில் புயல்களும் உருவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு மூன்றாவது புயலாக 'டானா' உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம், வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தற்போது புயலாகவும் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 'டானா' புயலாக வலுப்பெற்றுள்ளது. காலை 5:30 மணி நிலவரப்படி, இந்த புயல் பாரதீப்பில் (ஒடிசா) தென்கிழக்கே சுமார் 560 கிமீ தொலைவிலும், சாகர் தீவின் (மேற்கு வங்கம்) தெற்கு-தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.
இது நாளை அதிகாலை வடமேற்கு வங்கக் கடலில், வடமேற்கு நோக்கி நகர்ந்து கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும். பின்னர் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு தொடங்கி, அடுத்த நாள் காலை வரை, மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் எடுக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக இதுவரை 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
திப்ரூகார் - கன்னியாகுமரி
புதுச்சேரி - ஹவுரா
பெங்களூர் - கவுகாத்தி
புதுச்சேரி - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
தவிர, ஷாலிமார் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
காரக்பூர்-விழுப்புரம் செல்லும் அதிவிரைவு ரயில்
திருச்சி-ஹவுரா அதிவிரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
குமரி, நெல்லை, திருச்சியிலிருந்து வடமாநிலங்கள் செல்ல வேண்டிய ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications