நைட் ஷிப்ட் முடிந்து வந்த நபர்..போனை பிடுங்கி ஜிபேவில் ரூ50,000 பறித்த திருநங்கைகள்..சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் உள்ள பிரதான சாலையில், நைட் ஷிப்ட் பணி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50, 500 பணத்தை திருநங்கைகள் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு தனியாக செல்பவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. லிப்ட் கேட்பது போல வாகனத்தை மறிப்பது... வாகன ஓட்டிகள் இரக்கப்பட்டு வாகனத்தை நிறுத்தி கும்பலாக வந்து தாக்குதல் நடத்தி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து செல்வது போன்ற குற்ற செயல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

போலீசார் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி இத்தகைய செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரதான சாலையில், இளைஞர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50,500 பணத்தை திருநங்கைகள் பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் நைட் ஷிப்ட் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்து இருக்கிறார். பள்ளிக்கரணை சாலையில் ராமமூர்த்தி சென்ற போது அங்கு வந்த திருநங்கைகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. ஆனால், அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய திருநங்கைகள் அவரது கூகுள் பேயில் இருந்து 50 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமமூர்த்தியிடம் பணம் பறித்த திருநங்கைகளை தேடி வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் பள்ளிக்கரணை சாலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐடி நிறுவனங்களும் பல்வேறு கம்பெனிகளும் உள்ள அப்பகுதியில் தினமும் பலரும் பயணிக்கும் முக்கிய சாலைகளில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த வழிப்பறி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, போலீசார் குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதோடு.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications