பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்... போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!
சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பள்ளி மாணவர்கள் தங்களது பழைய பஸ் பாஸ் மூலமே அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலன்பெறுவார்கள் என்றும் பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அரசு சலுகை
பள்ளிக்கு சென்று கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக தான் அரசு சார்பில் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சீருடை, இலவச சைக்கிள், நோட்டு புத்தகங்கள், என அரசு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கினாலும் அவற்றில் பிரதானமானது அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயணம். அரசுப் பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் 1997-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது.

இலவச பாஸ்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் மாணவர்கள் அரசின் இலவச பஸ் பாஸ் மூலம் பயன்பெறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பாடம் படித்து வந்த மாணவர்கள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக பள்ளிக்குச் செல்லவுள்ளனர்.

ஸ்மார்ட் கார்டு
இந்நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அதுவரை பழைய பஸ் பாஸை காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. முன்பு காகித அட்டையில் வழங்கப்பட்டு வந்த இலவச பஸ் பாஸ் இப்போது ஸ்மார்டு கார்டு வடிவில் கொடுக்கப்படுகிறது.

சுற்றறிக்கை
இதனிடையே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்டு நடத்துநர்கள் கடிந்துகொள்ளாத வகையில், இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கும் போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications