முதல்வர் அதிரடி.. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றம்
சென்னை: போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அங்கு அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் அவருக்கு மிகவும் வலிமையான துறையான போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலின் அதிரடி
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இவர்களின் துறைகள் மாற்றப்பட்டதாக ஆளுநர் அலுவலக செய்திக் குறிப்பு கூறுகிறது. முதுகுளத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதியின் பெயரை சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியதாக புகார் எழுந்த நிலையில் இந்த துறை மாற்றப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.

ரூ 35 லட்சம் பறிமுதல்
மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நிறைய புகார்கள் திமுக தலைமைக்கு போனதாக தெரிகிறது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, எழிலகத்தில் ரூ 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழிலகத்தில் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் துணை போக்குரவத்து ஆணையராக இருப்பவர் நடராஜன்.

ரூ 35 லட்சம் பறிமுதல்
இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா 5 லட்சம் வீதம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அங்கு அறையில் பணம் கட்டுகட்டாக ரூ 35 லட்சம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

தீபாவளி பண்டிகை இனிப்பு
அது போல் போக்குவரத்து துறைக்கு தீபாவளிக்கு வெளியிலிருந்து இனிப்பு வாங்கியதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது போல் தொடர் குற்றச்சாட்டுகள் முதல்வர் ஸ்டாலினின் காதுகளை எட்டியது. இந்த நிலையில் தவறு செய்ய நினைக்கும் அமைச்சர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதால் ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications