சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. கடற்கரை சாலைகளிலும் தடை
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அது போல் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் காணப்படுகிறது. இந்த புயலானது இன்று மாலை அதி தீவிர புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வேகத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்தே சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்
எனினும் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் மக்கள் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்தை காவல் துறையினர் ரத்து செய்தனர்.

விழுந்த வாகன ஓட்டிகள்
இந்த சாலைகளில் காற்றின் வேகம் இப்போதே பலமாக வீசுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களையே அசைக்கும் அளவுக்கு காற்று வீசுவதால் பலர் காமராஜர் சாலையில் சறுக்கி விழுந்ததாக போலீஸார் கூறுகிறார்கள்.

3 சாலைகளில்
இதையடுத்து சாந்தோமிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகன ஓட்டிகளை டிஜிபி அலுவலகம் வழியாக டிடிகே சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். மாலை 4 மணி முதல் புயல் கரையை கடக்கும் வரை 3 சாலைகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர்
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல் துறை எடுத்துள்ளது. அது போல் பெசன்ட் நகர் சாலை, திருவான்மியூர் கடற்கரை சாலையும் மூடப்பட்டுள்ளது. கிளைச் சாலைகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டாலும் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மரங்கள் விழுந்து சாலைகளே ஸ்தம்பித்துள்ளது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications