ரூ.1,000 கொண்டு போனால், லட்சம் கிடைக்கும்! இந்திய ரூபாய் மதிப்பு உச்சத்தில் இருக்கும் நாடுகள் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பண மதிப்பு அதிகமாகவும் குறைந்த செலவில் சுற்றுலா பயணிகள் சென்று வரக்கூடிய சில நாடுகள் பற்றி இங்கே பார்க்கலாம். ஆசியாவில் உள்ள இந்த நாடுகளுக்கு சில ஆயிரம் ரூபாய் இருந்தாலே சுற்றுலா பயணிகள் சென்றுவிட்டுவர முடியும். இந்தியாவின் பண மதிப்பு அதிகமாக இருப்பதால், இந்தியாவின் பணத்தை மாற்றினால் அங்குள்ள உள்ளூர் பணத்தில் பெரும் தொகை கிடைக்கும். இந்தியாவிற்கு அருகில் உள்ள அந்த நாடுகள் எவை எவை? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பிற்கும் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு நாட்டின் தங்கக் கையிருப்பு, அன்னிய செலவாணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவாக பல வளர்ந்த நாடுகளில் உள்ளது.

Travel Indian Rupee Currency

இந்திய ரூபாயின் மதிப்பு

எடுத்துக்காட்டாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் ஒரு டாலரின் மதிப்பு என்பது இந்தியாவின் ₹87.67 ரூபாய்க்கு சமம். நமது நாட்டின் ₹87 ரூபாயை கொடுத்தால்தான் அமெரிக்காவில் ஒரு டாலர் கிடைக்கும். இதேபோல, யூரோவின் மதிப்பு இதைவிட அதிகம்.

அதேபோல், குவைத்தின் தினார் மதிப்பு ₹286.85 ஆக உள்ளது. குவைத்தின் ஒரு தினாருக்கு இந்திய பணத்தில் ₹286 செலவிட வேண்டியிருக்கும். பிரிட்டனை எடுத்துக் கொண்டால், அங்குள்ள பவுண்டுக்கு எதிரான இந்திய மதிப்பு ₹118.112 ஆக உள்ளது. சர்வதேச அளவில் பணத்தின் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளைப் போலவே, சில நாடுகளில் பண மதிப்பு மிகக் குறைவாகவும் உள்ளது.

இந்தியாவின் பண மதிப்பு குறைவாக உள்ள நாடுகளைப் போல, அதிகமாக உள்ள நாடுகளும் இருக்கின்றன. இந்தியாவை விட வளர்ச்சி குறைவாக, ஜிடிபி குறைந்த நாடுகள் பலவற்றிலும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ள டாப் 10 நாடுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:

வியட்நாம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில், இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்திய ரூ.1-க்குச் சமமான வியட்நாமின் பண மதிப்பு 300 ஆகும். நம்ம ஊர் ₹100 கொடுத்தாலே 30,000 வியட்நாம் டாங் கிடைக்கும். வியட்நாமுக்கு போனால் சில ஆயிரங்கள் கையில் இருந்தாலே லட்சபதியாக மாறிவிட முடியும். அந்த அளவுக்கு வியட்நாமில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது.

இந்தோனேஷியா

இந்த லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பது இந்தோனேஷியா. இதுவும் ஒரு ஆசிய நாடுதான். பல தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா என்ற பெயரைக் கேட்டதுமே நமக்கு நிலநடுக்கங்களும் எரிமலைகளும் நினைவுக்கு வருகிறது. இங்கு நிலநடுக்கங்கள் என்பது சர்வசாதாரணம். இந்தோனேஷியாவில் இந்திய ரூபாய்க்கு நிகரான பண மதிப்பு 184 ஆக உள்ளது.

இலங்கை

இந்தியாவின் மிக நெருக்கமான அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை, இயற்கை வளம் நிறைந்த நாடாக இருப்பதுடன், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்திய ரூபாய்க்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ₹3.44 ஆக உள்ளது. இலங்கை, சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள டீ எஸ்டேட்டுகள், காலே துறைமுகம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்ற இடங்கள்.

நேபாளம்

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான நேபாளம், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை காட்சிகள் நிறைந்த நாடாகும். இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் ஒன்று. இந்தியாவில் இருந்து பாஸ்போர்ட் இன்றி நேபாளம் செல்ல முடியும். இந்திய ரூ.1 = நேபாள ரூ.1.60 ஆக மதிக்கப்படுகிறது.

கம்போடியா

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவிலும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ளது. இந்திய ரூபாய்க்கு நிகரான கம்போடியா பண மதிப்பு ₹43.83 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+