நாளை திட்டமிட்டபடி நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு.. தொடர் கோரிக்கை நிராகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை தள்ளி வைக்க கோரிக்கைகள் எழுந்திருந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்துவது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. எனினும், இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

TRB tn government School

தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித்துறை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,966 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்விற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது முதல் தேர்வர்களை கலக்கத்தில் வைத்து வருகிறது. முதலில் செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வு தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட தேர்வு தேதி மாற்றம், புதிய பாடத்திட்டம் ஆகியவற்றால் தேர்வர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்விற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், மேலும் 3 வாரங்களுக்கு தேர்வை ஒத்திவைக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் விசாரணையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியமோ, தேர்வை ஒத்திவைக்க இயலாது எனத் தெரிவித்தது.

தேர்வை ஒத்தி வைக்கக்கோரி மீண்டும் தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதார்கள் தேர்வு எழுத உள்ளதாகவும், தேர்விற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அக்டோபர் 12-ம் தேதி திட்டமிடப்படி தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் திட்டமிடப்படி தேர்வு நடைபெறும் என்பதை உறுதிப்படுத்திய நிலையில், நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+