காங்கிரஸ் ஆசிர்வாதத்தில் பாஜக ஆளுகிறது.. தமிழிசை போட்டோவை கலாய்த்த டிஆர்பி ராஜா
தமிழிசையை குமரியார் வாழ்த்தி உள்ளதை டிஆர்பி ராஜா கலாய்த்துள்ளார்
Recommended Video
சென்னை: குமரி அனந்தன் தமிழிசை தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணிவிட்டார்... அதனால்தானோ என்னவோ, "காங்கிரசின் ஆசீர்வாதத்தில் பாஜக ஆள்கிறது" என்று கலாய்த்து ஒரு ட்வீட் போட்டுள்ளார் திமுகவின் டிஆர்பி ராஜா!
பழைய காங்கிரஸ்காரர்களுக்கு சரியான மரியாதை தரப்படவில்லை என்று மன வேதனை அடைந்து, தனிக்கட்சி தொடங்கி, அதிலும் சோபிக்க முடியாமல், சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் குமரிஅனந்தன்.

இன்னொரு பக்கம், வாரிசு அரசியலை ஒருபோதும் ஏற்காத நிலையில், பெற்ற மகளை பல சந்தர்ப்ப சூழலில் பிரிந்து, பேசாமலேயே தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர் குமரி அனந்தன்.
நேற்று தமிழிசைக்கு புதிய பொறுப்பு தரப்பட்டதும், குமரி அனந்தனிடம்தான் முதல் கருத்து கேட்கப்பட்டது. "தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய திறனுக்கும், உழைப்புக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளது வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை" என்று சொன்னார்.
வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றவரின் மனநிலை இன்று எப்படி ஆனதோ தெரியவில்லை. இவ்வளவு நாள், தன் மகள் கட்சிக்காக இவ்வளவு பெரிய சாதனையை தமிழ்நாட்டுக்கு செய்திருக்கிறாரா என்பது இன்னொரு மாநிலத்துக்கு பொறுப்பு வழங்கியபோதுதான் குமரியாருக்கு தெரியவந்ததோ அல்லது நாடு தழுவிய அளவில் மகளின் பெயர் உச்சரிப்பதை பார்த்து ஆனந்தக்கண்ணீர் உதிர்த்தாரோ தெரியவில்லை.
It's clear that the #Bjp is ruling today because of the "blessings" of the #Congress 😉😇 https://t.co/4HCGhbip08
— T R B Rajaa (@TRBRajaa) September 2, 2019
தமிழிசையின் தலையில் கை வைத்து மனசார வாழ்த்தியுள்ளார். குங்குமமும் வைத்து விட்டார். இந்த போட்டோவை தமிழிசையும் தனது ட்விட்டரில் எடுத்து போட்டு மகிழ்ந்துள்ளார். இந்த போட்டோவை தன்னுடைய ட்விட்டரில் எடுத்து போட்டுள்ளார் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா. "காங்கிரஸின் ஆசீர்வாதத்தில் பாஜக ஆள்கிறது" என்று கிண்டல் அடித்துள்ளார்.
எது எப்படியோ, அரசியல் ரீதியாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் தந்தையும்-மகளும் மீண்டும் இணைந்துள்ளது கண்கொள்ளா காட்சிதான்!
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications