புதுசா பதவியேற்ற டிஆர்பி ராஜாவுக்கு எந்த இடம் தெரியுமா..கயல்விழியை பாருங்க.. வெளியானது லிஸ்ட்
சென்னை : தமிழ்நாடு அமைச்சர்கள் மூப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திமுக அரசின் மொத்த அமைச்சரவை பட்டியலுடன், அவர்களுக்கான இடம் குறித்து பட்டியல் வெளியாகி உள்ளது.
புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு 27வது இடம் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராகி உள்ள தென்னரசுக்கு 9வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடம் கயல்விழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா இணைந்துள்ளார். முதன்முறையாக அமைச்சராகும் அவருக்கு தொழில்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை என்பது மிகப்பெரிய துறையாகும். மேலும் மிகவும் சவாலான துறையும் கூட. டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர்களின் மூப்பு பட்டியலை நேற்று பொதுத்துறை வெளியிட்டது. அதில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் மூப்பு பட்டியல் வரிசை வருமாறு:-
1 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2 நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
3 நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு
4 ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
5 உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
6 பொதுத்துறை அமைச்சர் எ.வ.வேலு
7 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
8 வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
9 நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
10 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
11 சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
12 வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி
13 கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்
14 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
15 தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன்
16 சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன்
17 மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்;
18 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்;
19 சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்;
20 உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி;
21 மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி;
22 கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி;
23 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;
24 வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி;
25 போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்;
26 இந்துசமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு;
27 தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்;
28 சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்;
29 பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;
30 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன்;
31 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்;
32 பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்;
33 தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா;
34 வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்;
35 ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications