இந்த போட்டோவை சட்டுன்னு பாருங்க.. உங்க கேரக்டரை ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.. சேலஞ்ச்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்றின் மூலம்.. உங்களின் கேரக்டரை எளிதாக கண்டுபிடிக்க முடியும்! எப்படி என்று கேட்கிறீர்களா வாருங்கள் பார்க்கலாம். ஒரு போட்டோவை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை எளிதாக கணித்துவிடலாம்.

நீங்கள் செய்தியில் கீழே பார்க்கும் கருப்பு நிற புகைப்படம் கிறிஸ்டோ டிராகோ என்பவர் வரைந்தது. இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள். மேற்கொண்டு படிக்காமல் முதலில் புகைப்படத்தை பார்க்கவும்!

மரம்

மரம்

ம்ம்ம் இப்போது சொல்லுங்கள்.. உங்களுக்கு மரமும் அதன் இழைகளும் தெரிந்ததா? அல்லது அழகான ஒரு உதடு தெரிந்தது.. அட இரண்டும் இல்லை பாஸ் எனக்கு மரத்தின் வேர்தான் முதலில் தெரிந்தது என்கிறீர்களா? சரி வாருங்கள்.. உங்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்பதை வைத்து உங்களின் கேரக்டரை கண்டுபிடிக்கலாம்!உங்களுக்கு முதலில் மரம் தெரியும் பட்சத்தில், நீங்கள் பெரும்பாலும் சகஜமாக பழகும் extrovert குணம் கொண்டவராக இருப்பீர்களாம். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், அதை வைத்து சமயங்களில் முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள் என்று heart.co.uk தளம் தெரிவித்துள்ளது. நீங்கள் தன்மையான குணம் கொண்டவராக இருப்பீர்கள். அதே சமயம் நீங்கள் மனதில் நினைக்கும் விஷயங்களை பிறரால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

 உணர்வுகளை மறைப்பார்கள்

உணர்வுகளை மறைப்பார்கள்

இவர்கள் எளிதாக தங்கள் உணர்வுகளை மறைக்க கூடியவர்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. பலருடன் சகஜமாக பழகினாலும், இவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும் , ஒரு சிலரிடம் மட்டுமே நெருங்கிய நண்பர்களாக இவர்கள் இருப்பார்கள், என்று heart.co.uk தளம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த புகைப்படத்தில் உங்களுக்கு முதலில் வேர்கள் தெரிந்தால், நீங்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்பும் நபர்களாக, அதிகம் introvert ஆக இருப்பீர்கள் என்று heart.co.uk தளம் தெரிவித்துள்ளது.

 விமர்சனம் பாசிட்டிவ்

விமர்சனம் பாசிட்டிவ்

நீங்கள் பெரும்பாலும் மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு உங்களை மெருகேற்றுவீர்கள். அதேபோல் மற்றவர்கள் முன்னேறவும் உதவுவீர்கள். சமயங்களில் நீங்கள் பிடிவாதம் கொண்டவராக இருக்கலாம். பெரும்பாலும் உங்களை முதலில் பார்ப்பவர்கள் குறைத்து மதிப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் போக போக உங்கள் திறமைகளை, சாதனைகளை வெளிப்படுத்துவீர்கள் என்று heart.co.uk தளம் தெரிவித்துள்ளது.

 உதடுகள்

உதடுகள்

ஒருவேளை உங்களுக்கு முதலில் உதடுகள் தெரிந்தால்.. நீங்கள் கவலை அடையாத, சிம்பிளான.. அமைதியான குணம் கொண்டவராக இருப்பீர்கள் என்று heart.co.uk தளம் தெரிவித்துள்ளது. பிரச்சனைகளை விரும்பாத, வாழ்க்கை போகும் வழியில் அமைதியாக செல்ல கூடிய, டிராமாக்களை விரும்பாத நபராக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் கவலைகள் மீது கவனம் செலுத்தாமல் சாந்தமாக இருப்பீர்கள். இதை பார்த்து உங்களை சிலர் வீக்கான நபர் என்று நினைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நீங்கள் உங்கள் பிரச்சனைகளை சுயமாக தீர்க்கும் அளவிற்கு தனித்திறமை கொண்டவராக இருப்பீர்கள் என்று heart.co.uk தளம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+