"ஏய் ஏய்".. எப்புட்றா இது.. நம்பவே முடியல.. வாயில என்னனு பாருங்க.. அசால்டா கடிச்சு கடிச்சு விழுங்குதே
சென்னை: சுத்த சைவம் என்று சொல்லப்பட்ட மான், திடீரென எப்போது நான்வெஜ்-க்கு மாறியது? என்பதே உலக மக்களின் ஆச்சரிய கேள்வியாக வலம்வந்து கொண்டிருக்கிறது.
சைவ உண்ணியான மான், புல் போன்ற தாவர வகைகளையே சாப்பிட்டு நாம் பார்த்திருக்கிறோம்... ஆனால் இப்போது ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் உள்ள காட்சியை நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அது ஒரு காட்டுப்பகுதி போல தெரிகிறது.. அந்த காட்டுப்பகுதியில், சாலையோரத்தில் உலா வரும் மான் ஒன்று, திடீரென எதையோ கடித்து உண்பது போல தெரிகிறது..

காட்டுப்பகுதி: அது என்னவென்று உற்றுபார்த்தால், அதன் வாயில் பாம்பு இருக்கிறது.. ஏதோ ரொம்ப காலமாகவே சாப்பிட்டு பழகியதைபோல, கேஷூவலாக பாம்பை சாப்பிடுகிறது.. புல் சாப்பிடுவது போலவே வெகு இயல்பாக மெல்லுகிறது.. அப்படியே அந்த பாம்பை கடித்து விழுங்குவதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.
சுவாரஸ்யம்: வனத்துறை அதிகாரியான பர்வின் கஸ்வான் என்பவர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. பிகேன் என்பவர் ட்விட்டரில் இந்த வீடியோவை ஷேர் செய்யவும், அதை வன அதிகாரியான பர்வின் கஸ்வான் எடுத்து, ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.. இந்த வீடியோவை பார்த்த ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
அதில் ஒருவர் சொல்கிறார்.. இத்தனை காலமும், வெறும் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு வந்துடுச்சோ என்னவோ என்று பதிவிட்டுள்ளார்.. மாற்றம் ஒன்றே மாறாதது என்று மேலும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
உடையும் லாஜிக்: புலி பசித்தாலும் புல் திண்ணாது என்ற கேட்டகிரியில்தான், மானும் சேருகிறது.. சைவ உண்ணிகள், சைவத்தினை மட்டும் தான் சாப்பிடும் என்ற லாஜிக்கையெல்லாம் இந்த வீடியோ உடைத்துள்ளது.. ஆகமொத்தம், இந்த வீடியோவை போல, சுவாரஸ்யமான கமெண்ட்களும் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications