திருச்சி மாவட்டத்தில் 23 லட்சம்.. மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள்.. வெளியான பட்டியல்
சென்னை: தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் சிவராசு.
Recommended Video
மொத்தம் 23 லட்சத்து 46 ஆயிரத்து 36 வாக்காளர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளனர் என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டன.

ஜனவரி 1ம் தேதி கணக்கு
அதன் பின்னர் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அந்ததந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவர் எனவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், புதிதாக தயார் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதியை கணக்கில் கொண்டு இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல்
கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்பிறகு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஒரு மாத காலம் நடந்தது.பெயர் சேர்க்க கோரி 9.44 லட்சம்; பெயர் நீக்கக்கோரி 2.20 லட்சம்; திருத்தம் கோரி 1.50 லட்சம்; முகவரி மாற்றம் கோரி 1.12 லட்சம் என மொத்தம் 14.27 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஒரு மாத காலத்தில் பெறப்பட்டன.

திருச்சி நிலவரம்
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதன்படி, திருச்சி மாவட்டத்தின் இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் சிவராசு. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்.

23 லட்சம்
திருச்சி மாவட்டத்தில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 752 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 10 ஆயிரம் பெண் வாக்காளர்களும்,284 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என ஆக மொத்தம் 23 லட்சத்து 46 ஆயிரத்து 36 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் தொகுதி வாரியாக மொத்தம் 1410 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலானது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 31 ஆயிரத்து 825 பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 81 ஆயிரத்து 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் 201 சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 இன் படி நீக்க பட்டவர்களின் எண்ணிக்கை 10,768 சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 ன்படி சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,074 கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை வித்தியாசம் 31, 306 அதிகரித்துள்ளது மேலும் மதுரை மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை (3,31,829) குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழவந்தான் தனி சட்டமன்ற தொகுதி இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை (2,19,194) மதுரையில் மொத்த வாக்குச்சாவடி அமைவிடங்கள் 1163 மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2718ஆக உள்ளது என்று பேசினார்.












Click it and Unblock the Notifications