சல்லி சல்லியா போகுமோ திமுக கணிப்பு.. திருச்சி கோட்டையில் ஓட்டை? விஜய் வீசும் அரசியல் வெடி.. சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய விஜய், அரசியலில் தீவிரமாகி உள்ளார்.. விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், தன்னுடைய பிரச்சாரத்தையும் துவங்கியிருக்கிறார்.. இந்த முறை தவெக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அக்கட்சி தலைவர் விஜய், எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்? என்ற ஆர்வம் தொடர்ந்து எழுந்து வருகிறது. அத்துடன் அது தொடர்பான அனுமானங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.. அந்த தகவல்கள்தான் சோஷியல் மீடியாவின் கவனத்தை பெற்று வருகிறது.

கடந்த வாரம் திருச்சியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கியிருந்தார் விஜய்.. மற்ற மாவட்டங்களை எல்லாம் விட்டுவிட்டு, விஜய் ஏன் திருச்சியில் இப்பயணத்தை தொடங்க வேண்டும் என்ற கேள்விகள் வலம்வந்தன.

Trichy DMK TVK Vijay

தவெக குறி வைத்த 5 மண்டலங்கள்

அதேசமயம், தமிழகத்தின் 5 மண்டலங்களில் விஜய்யின் கவனம் குவிந்துள்ளதாகவும், அதை வைத்தே சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படியானால், விஜய் எங்கே போட்டியிட போகிறார்? ஸ்டார் அந்தஸ்து பெற்றவர்கள் போட்டியிடும் தொகுதி என்னவாக இருக்கும்? என்ற ஆர்வமும் கிளம்பி விட்டது.

தன்னுடைய தவெக எந்த தொகுதியில் வலுவாக உள்ளதோ அங்கு போட்டியிட விஜய் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.. அந்தவகையில், திருச்சி, அரியலூர், மதுரையில் தற்போதைய பயணத்தை விஜய் கவனம் செலுத்தி வருவதால், இந்த திருச்சி, குன்னம், மதுரை என இந்த 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் முணுமுணுக்கப்பட்டன.

தற்போது விஜய் போட்டியிடும் தொகுதி எது என்பது குறித்து, கூடுதலாக மேலும் சில அனுமானங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

விஜய் போட்டியிடும் தொகுதி

அந்தவகையில், திருச்சி தொகுதியில் விஜய் களம் காண்பதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.. இதற்கு காரணம், ஏற்கனவே தவெக தரப்பில் பல சர்வேக்கள் எடுக்கப்பட்டதாம்..

அப்போது திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிகிறது.. திருச்சிக்கு அடுத்தபடியாக, சென்னை, சேலம், கோவை, மதுரை தொகுதியிலும் தவெகவுக்கு செல்வாக்கு இருக்கிறதாம். டெல்டாக்களை விட, வட தமிழகம், கொங்கு பகுதிகளிலும், தவெகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக அந்த சர்வேக்களில் தெரியவந்துள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி

அதாவது இந்த தொகுதியில், தவெகவை சேர்ந்த யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற்று விடுவார்களாம்.. அப்படியிருக்கும்போது, தலைவர் விஜய்யே களமிறங்கினால் 100 சதவீதம் வெற்றி கிட்டும் என்று நம்புகிறார்களாம்..

அதுமட்டுமல்ல, திருச்சி தொகுதியில் 20% இஸ்லாமியர் ஓட்டு, 18% கிறிஸ்தவர் ஓட்டு, 18% பிள்ளைமார் ஓட்டு, 10 % தாழ்த்தப்பட்டோர் ஓட்டுக்கள் என கணிசமான ஓட்டுக்கள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது..

அப்படி திருச்சியில் விஜய் களமிறங்கினால், டெல்டாக்களிலும் தவெக வாக்கு வங்கியை உயர்த்த முடியும் என்றும் விஜய் தரப்பு உறுதியாக நம்புகிறதாம்.

பல்லாண்டு வருட காலமாகவே திமுகவின் கோட்டையாக திருச்சி திகழ்ந்து வரும்போது, திருச்சியிலேயே பிரச்சாரத்தை விஜய் நடத்தியது திமுக தரப்பு கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது..

திருச்சி கோட்டையில் ஓட்டை

அதிலும் திருச்சியில் விஜய் பேசும்போது, "திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றும், அதனை தடுக்க முடியவில்லை. திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்தவித முன்னேற்றமும் தொகுதிக்கு ஏற்படவில்லை. வரும் தேர்தலில் மறுபடியும் இவர்களுக்கா வாக்களிக்க போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்ததும் திமுகவை கடுப்பாக்கி விட்டதாம்.

இப்போது திருச்சி கிழக்கில் விஜய் இறங்குவதாக வரும் தகவல்களும் திமுகவை டென்ஷனாக்கி வருவதாக கூறப்படுகிறது.. ஒருவேளை திருச்சியை குறிவைத்து விஜய்யின் அரசியல் நகர்ந்தால், அங்கு திமுக அரசின் நலத்திட்ட அறிவிப்புகளும், சலுகைகளும் இனி நிறைய வெளியிட வாய்ப்புள்ளதாம். மேலும் விஜய்க்கு வலுவான ஒருவரை அங்கே களமிறக்கவும் திமுக முனையும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+