அமமுகவில் வெற்றிவேல் இடத்தில் மனோகரன்... பல கோடி ரூபாய் வரவு செலவு பார்க்கும் பொறுப்பு..!
சென்னை: அமமுக பொருளாளராக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான மனோகரனை நியமனம் செய்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்த வெற்றிவேல் கொரோனா காரணமாக அண்மையில் காலமானார். இதையடுத்து அவரது இடத்திற்கு தினகரன் யாரை கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு அமமுகவினர் மத்தியில் எழுந்தது.

கரிகாலன், ரெங்கசாமி, மாணிக்கராஜா, பழனியப்பன் என பலரது பெயர்களும் அமமுக பொருளாளர் பதவிக்கு பரிசீலனையில் இருந்த நிலையில் டிடிவி தினகரன் மனோகரனை தேர்வு செய்துள்ளார். பொருளாளர் பதவி என்பது பல கோடி ரூபாய் வரவு செலவு பார்க்க வேண்டிய பொறுப்பு என்பதால் அதற்கு மூத்த நிர்வாகிகளில் யாரேனும் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தினகரன்.
அந்த வகையில் அவரது சாய்ஸ் மனோகரனாக உள்ளது. திருச்சி மனோகரனை பொறுத்தவரை நிதி விவகாரத்தை திறமையாக கையாளக் கூடியவர். பணம் விஷயத்தில் வியூகங்கள் வகுத்து நெளிவு சுளிவு அறிந்து செயலாற்றக் கூடியவர். ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது அவருக்காக அங்கு இரவு பகல் பாராமல் பணியாற்றிய மனோகரனுக்கு அரசு கொரோடா பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

குங்குமப் பொட்டு சகிதமாக வலம் வரும் மனோகரனுக்கு திருச்சியில் பெட்ரோல் பங்க், மருத்துவமனை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. மனோகரனுக்கு பொருளாளர் பதவி கிடைத்த அடுத்து அரைமணி நேரத்தில் அவரது ஆதரவாளர்களான துளசி சேகரன், என்.எஸ்.என். அப்துல்லா உள்ளிட்டோர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே உடுமலைப்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகவேலுவுக்கு தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பும், செந்தமிழனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் தரப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications