திருச்சி, ராமேஸ்வரம் பயணிகளே கவனம்.. மே 19ல் 4 முக்கிய ரயில்கள் ரத்து.. மாற்று ஏற்பாடு ரெடியா?
சென்னை: ரயில்வே சேவையை இன்னும் எளிதாக்கும் வகையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இருமார்க்கமாக இயங்கும் திருச்சி - ராமேஸ்வரம், காரைக்குடி - திருச்சி ரயில்கள் வரும் 19ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் 3 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் சேவையை எளிமைப்படுத்தும் வகையிலான என்ஜினியரிங் பணி நடைபெற உள்ளது. இந்த பணியால் மொத்தம் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்குடியில் என்ஜினியரிங் பணி நடைபெற உள்ளதால் வரும் 19ம் தேதி 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சியில் இருந்த காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வாண்டி என்: 16849), ராமேஸ்வரத்தில் இருந்துமதியம் 2.35 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (16850) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்க புறப்படும் காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் (06830), திருச்சியில் இருந்த மாலை 6.20 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் (06125) ஆகியவை மே 19ம் தேதி ரத்து செய்யப்பட உள்ளது.
மேலும் மே 19ம் தேதி காலை 8.40 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் (20895) வழித்தடம் மாற்றி விடப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, காரைக்குடி, புதக்கோட்டைக்கு பதில் இந்த ரயில் மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இயங்க உள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளது.
மேலும் மே 19ம் தேதி திருவாரூரில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் திருவாரூர் - காரைக்குடி டெமு ரயில் (06197) தனது பயணத்தை பெரியகோட்டையுடன் முடித்து கொள்ளும். பெரியக்கோட்டை - காரைக்குடி இடையே இந்த ரயில் சேவை அன்றைய தினம் இருக்காது. அதேபோல் மே 19ல் திருச்சியில் ருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்குடி டெமு ரயில் (06829) செட்டிநாடுடன் பயணத்தை முடித்து கொள்ளும். இந்த ரயில் செட்டிநாடு - காரைக்குடி இடையே இயங்காது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications