விஜய்க்கு அப்போ ஒரு வயது.. மிசாவில் கைதான ஸ்டாலின்! என்ன நடந்தது தெரியுமா! திருச்சி சிவா சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு ஒரு வயதாக இருக்கும்போது ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்றும் மிசா காலத்தில் மிக பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு இருந்ததாகவும் திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும், அப்போது ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து தமிழ்நாடு வேறுபட்டு இருந்தது என்றும் அதற்கு காரணம் கருணாநிதி தான் என்றும் அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாகவே மிசா குறித்தும் ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. தவெக அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஸ்டாலின் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டதாகவே கூறி வருகிறார்கள்.

Trichy Siva Misa Stalin Vijay

திருச்சி சிவா

இதற்கிடையே திமுக எம்பியான திருச்சி சிவா, எமெர்ஜென்சிக்கு எதிராக கருணாநிதி எடுத்த நிலைப்பாடு மற்றும் அப்போது மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு விரிவாக பேட்டியளித்துள்ளார். எமர்ஜென்சி சமயத்தில் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டதுடன், அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டதாகவும், அப்போதும் ஜனநாயகத்துக்காக திமுக குரல் கொடுத்ததாகவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ஒரு வயது

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில் "விஜய் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது, ஸ்டாலினுக்கு 23 வயது; அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. நானோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தேன். 1975ல் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டபோது, ​​இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது.. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ஒருவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், அது சட்டவிரோதமான கைது என்று கூறி நீதிமன்றத்தை அணுக முடியாத சூழலும் ஏற்பட்டது" என்றார்.

அந்த காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழல் குறித்தும் பேசிய அவர், "அப்போது திமுகவுக்கு சட்டசபையில் 184 சீட்கள் இருந்தன. அதற்கு முன்பும் சரி, அதற்கு பிறகும் அவ்வளவு இடங்களை எந்தவொரு கட்சியும் வென்றதில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோதிலும், எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட உடனேயே அதை திமுக எதிர்த்தது. கருணாநிதி திமுக திமுக செயற்குழுவைக் கூட்டினார். எமர்ஜென்சியை திரும்ப பெற வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருணாநிதி

அந்த தீர்மானத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மிக பெரிய பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. இதையடுத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கூட்டணி கட்சியாக இருக்கும்போது ஏன் எதிர்க்க வேண்டும் என கருணாநிதியிடம் கேட்டார். அதற்கு அவர், கூட்டணி இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார். அந்த காலகட்டத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டன. தொழிற்சங்கங்களும் மாணவர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின" என்றார்.

அதைத் தொடர்ந்தே 1976 ஜனவரி 31ஆம் தேதி திமுக அரசு கலைக்கப்பட்டதாகவும், மறுநாளே பல முக்கிய திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்டாலினை கைது செய்ய போலீசார் கருணாநிதி இல்லத்துக்கு சென்றதாகவும், அவர் அப்போது வெளியூரில் சென்றிருந்ததால், திரும்பி வந்ததும் தானே தகவல் தெரிவிப்பதாக கருணாநிதி கூறியதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார். பின்னர் ஸ்டாலின் திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அதற்கான போட்டோ மற்றும் ஆவணங்கள் இருப்பதாகவும் கூறினார்.

மிசா சிறைவாசம்

மிசா கைதிகள் மீது சிறையில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய திருச்சி சிவா, ஸ்டாலின் தாக்கப்பட்டபோது அவரை காப்பாற்ற முயன்ற சிட்டிபாபு, சிறை அதிகாரிகளின் தாக்குதலில் காயமடைந்து சில நாட்களில் உயிரிழந்ததாக தெரிவித்தார். சிட்டிபாபுவின் நாட்குறிப்பில் இந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தானும் அப்போது மாணவராக இருந்ததாகவும், பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்ததாகவும் தெரிவித்த திருச்சி சிவா, "இவை அனைத்தும் வரலாற்று நிகழ்வுகள். இது மிகப்பெரிய தியாகம்" என்று குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+