மன்னன் படத்தில் வரும் டயலாக்.. காயத்ரிக்கு ஆப்ட் ரிப்ளைனு டெடிகேட் செய்த திருச்சி சூர்யா சிவா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னன் படத்தில் வரும் ரஜினிகாந்த் டயலாக்தான் காயத்ரி ரகுராமுக்கு பொருத்தமான பதில் என திருச்சி சூர்யா சிவா வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் டெய்சி சரண்- திருச்சி சூர்யா சிவா ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் தினந்தோறும் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வந்தார்.

இதையடுத்து அண்மையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். கட்சிக்காக 8 ஆண்டுகள் உழைத்த தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் தூக்கி எறிந்துவிட்டதாக காயத்ரி விமர்சனம் செய்திருந்தார்.

திருச்சி சூர்யா சிவா

திருச்சி சூர்யா சிவா

அதே வேளையில் பெண்ணை தவறாக பேசிய திருச்சி சூர்யா சிவா கட்சியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தும் அதை அண்ணாமலை இன்னமும் ஏற்காமல் அப்படியே வைத்திருக்கிறார் என்றும் காயத்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையை தன்னுடன் விவாதத்திற்கு காயத்ரி அழைத்த வண்ணம் இருந்தார்.

பாஜக நிர்வாகிகள்

பாஜக நிர்வாகிகள்

இதற்கு பாஜக நிர்வாகிகள் காயத்ரிக்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட தயாரா, அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன் என காயத்ரி சவால் விட்டிருந்தார். இதற்கு திருச்சி சிவா, "நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரதுக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு, இல்லையெனஅறால் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு" என காயத்ரியை கடுமையாக ஒருமையில் விமர்சித்தார்.

காயத்ரி

காயத்ரி

தொடர்ந்து காயத்ரியை திருச்சி சூர்யா சிவா விமர்சித்து வருகிறார். அத்துடன் அவரை அவதூறு வார்த்தைகள் பயன்படுத்தியும் பேசி வருகிறார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடி ஆட்களுக்கும், வார்ரூம்களுக்கும் எல்லாம் அறிவுறுத்துவது அண்ணாமலை தான் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை பெண்களை எப்படி தவறாக மதிப்பிடுகிறார், பெண்களை பற்றி எப்படி பேசுகிறார் என்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு சாட்சி என குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சூர்யா சிவா ட்விட்டர்

இதற்கு திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து மன்னன் படத்தில் வரும் டயலாக்கை கூறியுள்ளார். அந்த படத்தில் ரஜினிகாந்த் விஜயசாந்தியிடம் பேசும் ஒரு டயலாக் சொல்வார். அதில் அவர் கூறுகையில், நான் பெண்ணை மதிக்காதவனா, நான் பெண்ணுக்கு மரியாதை கொடுக்காதவனா. உலகத்திலேயே நீ ஒருத்திதான் பெண்ணென்று நினைச்சா அந்த பெண்ணுக்கு நான் மரியாதை கொடுக்கலேன்னு நினைச்சுக்கோ என டயலாக் பேசியிருப்பார் ரஜினி. இந்த வீடியோவை காயத்ரிக்கு டேக் செய்த திருச்சி சூர்யா சிவா, பொருத்தமான பதில் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+