செல்வப்பெருந்தகை ரவுடியா? அப்ப காடுவெட்டி யார்? அண்ணாமலை மீது பாயும் திருச்சி சூர்யா
சென்னை: செல்வப்பெருந்தகைக்கும் அண்ணாமலைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலுக்குப் பின்னால் உள்ள விவகாரங்களைப் பற்றி திருச்சி சூர்யா பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.
கடந்த 20 ஆம் தேதி பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சூர்யா சிவா, தொடர்ந்து பாஜக பற்றிய உட்கட்சி விவகாரங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் போட்டு அம்பலப்படுத்தி வந்த நிலையில், இவரது கோபம் இப்போது அண்ணாமலை பக்கம் திரும்பியுள்ளது. அண்ணாமலைக்கு விசுவாசமாக இருந்த தன்னையே அவர் கட்சியை விட்டு நீக்கி விட்டதாகவும் அவர் ஒரு சுயநலவாதி என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் திருச்சி சூர்யா.

மேலும் ஆருத்ரா மோசடிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? பாஜக அவர்களுக்கு எப்படி அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றி வருகிறது என்பது பற்றிப் பல ரகசியங்களை சூர்யா எடுத்துக் காட்டி பேசியுள்ளார். ஒரு யூடியூப் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பாஜகவில் குற்றப்பின்புலம் கொண்டவர்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டது எப்போது? குறிப்பாக எல்.முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் அதிகம் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், அதைத் தமிழிசை சுட்டக்காட்டவில்லை. அண்ணாமலை பதவிக்கு வந்த பிறகுதான் சேர்க்கப்பட்டதைப் போல ஒரு வாதத்தை அவர் முன்வைக்கிறார். அது தவறு என்பதுதான் என் வாதம். அதற்காகத்தான் நான் அவரை எதிர்த்தேன். கட்சிக்கு ரவுடிகளே தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. பணமும் தேவை, ரவுடிகளும் தேவை. இரண்டுமே கட்சிக்குத் தேவைதான். ஆனால், அண்ணாமலைதான் அதிகமாக ரவுடிகளை சேர்த்தார் என்பது உண்மை இல்லை.
இப்போது செல்வப்பெருந்தகை விவகாரத்தில் இதே தான் நடந்து கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்காகவும் விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடுபவர்கள் மீது வழக்குகள் பல போடப்படுகின்றன. திருமாவளவன் மீது கூட வழக்குகள் உள்ளன. செல்வப்பெருந்தகை மீது குண்டர் வழக்குப் போடப்பட்டதால் அண்ணாமலை அவரை ரவுடி என்கிறார்.
அப்படிப் பார்த்தால் பாஜக கூட்டணியில் தான் பாமக உள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான் காடுவெட்டி குரு. அவர் மீது 2 குண்டர் சட்ட வழக்குகள் போடப்பட்டன. அப்படி என்றால் அண்ணாமலை காடுவெட்டி குருவை ரவுடி ஷீட்டர் என்று சொல்வாரா?
செல்வப்பெருந்தகை கேட்கக் கூடிய கேள்வி என்ன? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகி உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவர் பாஜக பிரமுகர்கள். ஆற்காடு சுரேஷ் என்பவர் நேரடியாக பாஜகவிலிருந்தவர். அவரது தம்பிதான் இப்போது பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ததாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஆக, கைதானவர்களில் 2 பேர் பாஜக என்பதால் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அண்ணாமலை, 'அப்படியான ரெக்கார்ட் எதுவும் இல்லை’ என்று சொன்னார். ஆகவேதான் செல்வப்பெருந்தகை அதற்கான ரெக்கார்ட்டை வெளியிட்டார். அவர் 261 ரவுடிகள் பாஜகவில் உள்ளதாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளன என்கிறார்.
ஒரு நல்ல முன்னாள் காவல்துறை அதிகாரியாக, ஒரு மாநிலத் தலைவராக அண்ணாமலை என்ன செய்திருக்க வேண்டும்? அந்தப் பட்டியலில் உள்ளவர்களைக் கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். நீங்கள் அவர்களைச் சேர்க்கவில்லை என்பதை ஏற்கிறேன். ஆனால், ஏன் நீக்க மறுக்க வேண்டும்?
சைலேந்திரபாபு பொறுப்பு வந்த பிறகு ரவுடிகளின் பட்டியலை தயார் செய்தார். அவர்களை என்கவுண்டரில் போடப் பட்டியல் தயார் செய்தார். அதிலிருந்த பாதிப் பேர் பாஜகவுக்கு வந்துவிட்டார்கள். அவர்களை என்கவுண்டர் செய்தால் என்ன ஆகும்? ரவுடி என சொல்லமாட்டார்கள். பாஜகவினரைச் சுட்டுவிட்டார்கள் என்றுதான் தேசிய தலைமைக்குத் தகவல் சொல்வார்கள். அப்படி என்றால் ரவுகடிகளில் ஆதிக்கத்தை அரசு எப்படி ஒழிக்க முடியும்?
ஆம்ஸ்ட்ராங் கொலையில் என்ன நடந்தது. ஆருத்ரா கும்பல் பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டுகிறது. அந்த மோசடி கும்பலை பாஜக ஆதரிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் ஆம்ஸ்ட்ராங்கைப் பார்த்து முறையிடுகிறார்கள். அவர் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ளே வருகிறார். ஆகவே, அவரை தலையிட வைக்காமல் தடுக்க வேண்டும். அதற்காக மோசடி கும்பல் ரவுடியின் உதவியை நாடுகிறது. அங்குதான் ஆற்காடு சுரேஷ் தம்பி வருகிறார்.
இப்படி ரவுடிகளின் கூடாரமாக பாஜக இருக்கிறதா? இல்லையா? என்பதை அண்ணாமலைதான் நிரூபிக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறிவிட்டார். சில நாட்கள் முன்னதாக பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் தமிழிசை பேசிய போது வந்தவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றுள்ளனர். காரணம், அண்ணாமலை மீது அவ்வளவு வெறுப்பு கட்சிக்குள் நிலவுகிறது.
அவர் பலருக்குப் பதில் சொல்கிறார் இல்லையா? நான் இவ்வளவு விமர்சனங்களை முன்வைக்கிறேனே? ஏன் பதில் தர மறுக்கிறார்? அவர் சொன்னால், அண்ணாமலை பற்றிய பல ரகசியங்களை நான் வெளியிடுவேன் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே அமைதியாக இருக்கிறார்” என்கிறார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications