திருச்சி சூர்யா லீக் செய்த ஆடியோ.. சில்லரைத்தனத்தின் உச்சம்.. அண்ணாமலை குறித்து சாட்டை துரைமுருகன்
சென்னை: 'அண்ணாமலையை விட்டுவிடுங்கள், திமுகவை டார்கெட் செய்யுங்கள் என்று சீமான் கூறினார்' என்று நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் உடன் பேசும் பரபரப்பு ஆடியோவை பாஜக-வின் திருச்சி சூர்யா வெளியிட்டார். இந்த வீடியோவிற்கு சாட்டை துரைமுருகன் கடும் எதிர்வினை ஆற்றி உள்ளார்.
பாஜகவின் திருச்சி சூர்யாவும், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனும் போனில் பேசியுள்ளனர். இந்த ஆடியோவை திருச்சி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஆடியோவில், சாட்டை துரைமுருகன் பேசும் போது, கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விட்டு விடுங்கள், திமுகவை டார்கெட் செய்யுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக கூறினார்.

மேலும் தான் அண்ணாமலை குறித்து வீடியோ போட்டத்தை சீமானிடம் கூறிய போது, அவரை போட்டு எதற்கு அடிக்கிறாய் என்று என்னிடம் கேட்டார். மேலும் நம்முடைய முழு டார்கெட் அண்ணாமலை தான் என்றும் கூறினார்..
அதற்கு திருச்சி சூர்யா வேறு எங்கு அடித்தாலும் அங்கு வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார்.. அதற்கு சாட்டை துரைமுருகன்.. சொல்லீட்டீங்கள்ல.. நான் கமிட்மெண்ட் கொடுக்க மாட்டேன்.. இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவதாக ஆடியோவில் இருக்கும்.. ஐந்து வருடத்தில் பாஜகவிற்கு ஒட்டு போட்டு தமிழ்நாடு நாசமாக போகவில்லை என்றும் சாட்டை துரைமுருகன் கூறுவதாக ஆடியோவில் இருக்கிறது..
மேலும் பாஜக குறித்து வைத்த விமர்சனம் குறித்து திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியதுடன்.,. கூடவே சுத்துறய செவ்வாழை சொல்லக்கூடாதா என்ற பாணியில் கேள்வியும் எழுப்புவார். அதற்கு அரசியல் ரீதியாக சின்னம் குறித்து அப்படித்தான் பேச முடியும் என்பதாக சாட்டை துரைமுருகன் பேசுவதாகவும் ஆடியோவில் இருக்கிறது .

மேலும் சின்னம் குறித்து சாட்டை துரைமுருகன் பேசுகையில், மைக்சின்னம் வேண்டாம் என்றும் வேறு சின்னம் வேண்டும் என்றும் கேட்டோம்..இன்று தெரிந்துவிடும் என்பார். அதற்கு திருச்சி சூர்யா மைக் சின்னம் நல்லாத்தானே இருக்கிறது .. உங்கள் தலைவருக்கு அது அடையாளம் தானே என்பார்.. அதற்கு சாட்டை துரைமுருகன், கொள்ளிக்கட்டை, சவப்பெட்டி என எதுவேண்டுமானாலும் வாங்கி கொண்டு போயிருக்கலாம் என்று கூறுவதாக ஆடியோவில் உள்ளது..
இந்த ஆடியோவை வெளியிட்ட திருச்சி சூர்யா, சீமானை கடுமையாக விமர்சித்தார்..இதற்கு பதிலடி கொடுத்த சாட்டை துரைமுருகன், "ஆடியோவில் என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன்.. எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் ! அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம் தமிழர் கட்சி துவங்கப்பட்டது !
பாஜக மனித குலத்திற்கு ஆபத்து.. அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி காணொளி போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பது போல் அலைபேசி உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம் ! இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்ற சில்லரைகளை காலி செய்வோம் !" என்று கூறியுள்ளார். சாட்டை துரைமுருகனும், திருச்சி சூர்யாவும் மாறி மாறி ட்விட்டரில மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications