Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நாங்கெல்லாம் வாய்க்கரிசி போட்டுக்கிட்டு தான் திமுகவுக்குள்ளயே நுழைஞ்சவங்க'.. ஜெ அன்பழகன் பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெ அன்பழகன் நினைவு நாள் இன்று.. அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இப்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை திமுகவினர் வெளியிட்டு அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 2020ல் உயிரிழந்தார். 2011ம் ஆண்டு திமுக மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. குறிப்பாக சென்னையில் இப்போது எப்படி அதிமுக தோல்வியை தழுவியதே அது போல் பயங்கரமான தோல்வி.

சென்னையில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் ஒருவர் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின். கொளத்தூர் தொகுதியில் வென்றார். அடுத்ததாக ஜெ அன்பழகன், இவர் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். திமுகவின் அசைக்க முடியாத ஒரு தொகுதி என்றால் அது திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி. இது திமுகவின் கோட்டையாகும். இங்கு தான் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ளார்.

சரி விஷயத்திற்கு வருவோம். எல்லாருமே தோற்ற போதும் ஜெ அன்பழகன் மட்டும் 2011ல் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றது திமுகவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் வெற்றி பெற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இளைய தலைமுறையை குறிவைத்து அவர் பல விஷயங்களை செய்தது தான் காரணம் என்று கூறப்பட்டது. 2021ல் அவர் இருந்திருந்தால் நிச்சயம் அமைச்சராகி இருப்பார். சென்னையில் திமுகவை பொறுத்தவரை முக்கியமான தலைவராகவும் திகழ்ந்தார். ஜெயலலிதாவிற்கு எதிராக சட்டசபையிலேயே கடுமையாக பேசியவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் பேசிய வீடியோ ஒன்றை இப்போது பார்ப்போம்.

ஜெ அன்பழகன் முன்பு ஒரு முறை பேசிய வீடியோவில், வாரிசு அரசியல்ன்னு எப்படி சொல்லலாம். ஜெயிலுக்கு போய், கஷ்டப்பட்டு வந்திருக்கோம், அதுவா வாரிசு அரசியல்.. எங்கப்பா ஒரு கட்சியிலும், நான் ஒரு கட்சியிலும் இருந்தால் ஊர் சிரிக்காதா.. அண்ணா திமுகவுல அப்படி இருப்பீங்க.. காரணம் அது ஒரு கம்பெனி.. அப்படித்தான் இருப்பீங்க.. திமுகவுல அப்படி இல்லை குடும்பமே ஒரே கட்சியில தான் இருப்போம். இதுல என்ன வாரிசு, சூட்டிக்க பட்டம் எவ்வளவு வேண்டுமானாலும்.. நாங்க தியாகம் பன்றதுக்கு ரெடியாக இருக்கோம். நீ பண்ணுவியா தியாகம்.. தியாகம் பன்றதுக்கு உங்களுக்கு அந்த துணிச்சல் கிடையாது.

Triplicane former MLA J Anbazagans old mass speech video about Jayalalithaa

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் எதிர்த்து பேசுற ஒரு ஆளாக இருந்தேன் நான். எல்லாவற்றையும் பேச மாட்டேன். தலைவர் கலைஞர, தளபதிய, திமுகவ தொட்டு பேசனா.. ஜெயலலிதா இல்லை.. யாராக இருந்தாலும் எதிர்த்து பேசுவேன். அதில் எனக்கு ஒன்றும் மாற்றுக்கருத்தே இல்லை.. ஏன்னா கூட்டத்துல இருக்குற தொண்டர்களுக்கு என்ன உணர்ச்சி இருக்குதோ, அத்தனை உணர்ச்சியும் எனக்கும் இருக்குது..

எல்லாருடைய உணர்ச்சியும் சேர்த்து தான் அசம்பிளியில் நான் உட்கார்ந்து இருக்கிறேன்.. அதனால் அங்க வந்து தலைவரையும் , கலைஞரையும் எதிர்த்து பேசிட்டு போயிட முடியாது. அந்தம்மா இருந்தவரைக்கும் நானும் அதை விட்டுக்கொடுத்தது இல்லை. நான் சட்டசபையில் இருந்தால் தலைவர் கலைஞர் பெயரை உச்சரிப்பதற்கு அந்தம்மா தயங்குவாங்க.. அதுதான் திமுக... உடனே எழுந்து சொல்வேன்.கெசட்டில் செல்வி ஜெயலலிதா என்று தானே போட்டிருக்கிறது. எதற்கு அம்மா என்று கேட்கிறீர்கள்.. ஆ உன்னு கத்துவாங்க.. வெளியேற்றுவாங்க.. அது அசிங்கம் அந்த அம்மாவுக்கு..

சில நேரங்களில் என்னை அப்படி பார்ப்பாங்க.. சீட்ல நான் இருக்கன்னா இல்லையான்னு.. சீட்ல நான் இருந்துட்டா முன்னாள் முதல்வர்னு போயிடுவாங்க.. எப்போதாவது பெரிய வாதம் வரும் போது தான் கருணாநிதின்னு சொல்வாங்க.. நான் உடனே ஜெயலலிதா என்று சொல்வேன். நான் நேருக்கு நேராக சொல்வேன், எனக்கு ஒன்றும் பயம் இல்லை.. பயந்துகிட்டு எல்லாம் அரசியலில் நான் இல்லை.. நாங்கெல்லாம் வாய்க்கரிசி போட்டுக்கிட்டு தான் திமுகவுக்குள்ளயே நுழைஞ்சவங்க.. எங்களுக்கு ஒன்னும் அதை பற்றி எல்லாம் கவலையே இல்லை.. பயம் என்றால் என்னென்னே தெரியாது. கலைஞரின் வளர்ப்பு நான் .. ஆளும் கட்சிகூட இவ்வளவு கம்பீராக பேச முடியாது.. " இவ்வாறு அந்த வீடியோவில் ஜெ அன்பழகன் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+