திருவல்லிக்கேணி டூ நுங்கம்பாக்கம்.. ஏரியா மாறி வந்த டிராபிக் எஸ்ஐ.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீசார் ஏரியா விட்டு ஏரியா போய் வாகன சோதனை நடத்தி வழக்கு போட்டிருக்கிறார்கள். அனுமதியின்றி போலீசார் நடத்திய இந்த சோதனை விவகாரம் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்த நிலையில், ஆக்சன் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் எஸ்ஐ மற்றும் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னையை பொறுத்தவரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கவும், குற்றச் செயல்களை குறைக்கவும் ஏராளமான காவல் நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஏரியாவிற்கும் ஒரு காவல் நிலையம் முதல் இரண்டு காவல் நிலையங்கள் வரை இருக்கிறது. ஒரு காலத்தில் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லை என்பது வண்டலூர் தொடங்கி ரெட்ஹில்ஸ் வரையிலும், மெரினா தொடங்கி ஆவடி வரையிலும் இருந்தது. ஒட்டுமொத்தமாக 140க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்தன.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காகவும் சென்னை பெருநகர காவல்துறை, சென்னை, தாம்பரம், ஆவடி என கடந்த 2022ம் ஆணடு ஜனவரியில் மூன்றாக பிரிக்கப்பட்டது. 3 காவல் ஆணையரகங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 104 காவல் நிலையங்களும், ஆவடி மாநகர காவல்துறையின் கீழ் 25 காவல் நிலையங்களும், தாம்பரம் காவல் ஆணையரத்தின் கீழ் 20 என சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களும் ஒதுக்கப்பட்டன. இதில் டிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள் அண்மைக்காலமாக பணியில் இருக்கிறார்கள்..
சென்னையில் கடந்த 2022 ம் ஆண்டு கோயம்பேடு, கொளத்தூா், கொளத்தூா் சரகம், வில்லிவாக்கம் சரகம், புழல் சரகம் ஆகிய 3 சரகங்கள் உருவாக்கப்பட்டன. சென்னையில் 103 காவல் நிலையங்கள் இருக்கும் நிலையில், காவல் நிலைய எல்லை ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட தூரம் வரை இருக்கிறது. மிக குறுகிய தூரங்களே காவல் நிலையங்களுக்கு எல்லைகளாக உள்ளன.
சென்னையை பொறுத்தவரை இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தப்படுவது வழக்கம்.. அந்த வகையில் தினமும் தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனை நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஏரியா விட்டு ஏரியா வந்து சோதனை நடத்திய புகாரில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளவர் சிவலிங்கம். இவருக்கு 54 வயது ஆகிறது. திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக உள்ளவர் அந்தோணி ஜான்சன். இவருக்கு 34 வயது ஆகிறது. இவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து இணை கமிஷனர் மகேஷ் நேற்று உத்தரவிட்டார்.
இவர்கள் 2 பேரும் தங்களுடைய எல்லையில் சோதனை நடத்தி வழக்கு போடாமல், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகனங்களை மடக்கி வழக்கு போட்டதாக புகார் எழுந்தது. மேலும் இப்படி சோதனை நடத்துவதற்கு உயரதிகாரிகளின் அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது. இதனிடையே திருவல்லிக்கேணி போலீஸ் எல்லையை தாண்டி நுங்கம்பாக்கம் போலீஸ் எல்லையில் வழக்குப் போட்டதால் எஸ்ஐ சிவலிங்கம் மற்றும் காவலர் அந்தோணி ஜான்சன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications