மன்சூர் அலிகானின் ஆபாச பேச்சு.. விளாசி தள்ளிய த்ரிஷா.. கூடவே சப்போர்டிற்கு வந்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், இதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கருத்து கூறியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் த்ரிஷா ஜோடியாக நடித்த திரைப்படம் லியோ.. கடந்த மாதம் வெளியான இந்த லியோ திரைப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் வசூலை வாரிக் குவித்தது.

தீபாவளிக்கு சில படங்கள் வந்த போதிலும், அதையும் தாண்டி இன்னுமே கூட சில இடங்களில் விஜயின் இந்த லியோ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் சினிமெட்டிக் யூனிவர்சிலும் இடம் பெற்றிருந்தது.
மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு: இந்த லியோ படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தார். இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் கூறிய கருத்துகள் ஆபாசமாகவும் மிகவும் மோசமாகவும் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இதை இணையத்திலேயே பலரும் சுட்டிக் காட்டி கடுமையாக விமர்சித்தனர்.
த்ரிஷா: இதற்கிடையே மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மன்சூர் அலி கான் என்னைப் பற்றி அவருவருக்கதக்க வகையில் பேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. அவரது பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், அவமரியாதை செய்யும் விதமாகவும், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருக்கிறது.
என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும்.. ஆனால் அவரைப் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் இணைந்து நடிக்கவில்லை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் நடிக்காமல் மாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கு இழுக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ்: இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இந்த விவகாரத்தில் ட்வீட் செய்துள்ளார். த்ரிஷாவின் ட்வீட்டை ரிட்வீட் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் மோசமானதாகவும் கோபமடைய வைப்பதாகவும் இருக்கிறது. பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதைச் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி, மன்சூர் அலிகானின் ஆபாசமான பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications