Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிஷா சர்ச்சை.. மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து.. உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா உள்ளிட்ட மூவரிடம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கோரி மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை இன்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. நடிகை திரிஷா உள்பட பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கண்டித்தனர்.

Trisha Controversy: Chennai High Court quashed the Rs.1 lakh fine imposed on actor Mansoor Ali Khan

சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர மன்சூர் அலிகான் முடிவு செய்தார்.

இதற்கு அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், திரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு எதிராக வழக்குத்தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற இருவர் மீதான வழக்கையும் தொடர விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+