Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை" ஒரே வரியில் த்ரிஷா பதில்! அடுத்த நொடி கமல் சொன்ன வார்த்தை! ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா.. தக் லைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது த்ரிஷா தனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்டார். த்ரிஷாவின் இந்தப் பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. கடந்த 2002ல் வெளியான சூர்யாவின் மவுனம் பேசியதே படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சாமி, கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்கள் வரிசையாக ஹிட் அடித்தது.

Trisha Krishnan Opens Up About her view on Marriage Amid Dating Rumors

த்ரிஷா

இதனால் தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழிகளிலும் இவர் படங்களில் நடித்து வந்தார். இவர் சினிமா துறைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர் நடிப்பில் அடுத்து தக் லைப் படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையே தக் லைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தான் நடிகை த்ரிஷா தனது திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்தார். அவரது பதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

திருமணம் குறித்த கேள்வி

தென்னிந்தியச் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள த்ரிஷா. 41 வயதான த்ரிஷாவிடம் திருமணம் குறித்தே ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். கடந்த சில காலமாகவே நடிகர் ஒருவரை டேட் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதை அவர் அதிகாரப்பூர்வமாக எங்கும் அறிவிக்கவில்லை.

த்ரிஷா பதில்

இதற்கிடையே தக் லைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் திருமணம் குறித்த கேள்விக்கு த்ரிஷா பதிலளித்துள்ளார். தனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்ற அவர், திருமணம் நடந்தாலும் ஓகே.. இல்லை என்றாலும் ஓகே என்பது போலக் குறிப்பிட்டார். இது தொடர்பான கேள்விக்கு த்ரிஷா, "எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை.. திருமணம் நடந்தாலும் ஓகே.. நடக்காவிட்டாலும் ஓகே தான்" என்று அவர் கூறினார்.

கமல் சொன்ன பதில்

அப்போது கமல்ஹாசன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார். உடனே அவரிடம் த்ரிஷா பதில் குறித்துக் கேட்டதற்கு, "இல்ல.. இல்ல.. அவர் ஓட்டுப் போடுவாரா.. இல்லையா என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்" எனப் பதிலளித்தார். தொடர்ந்து கமலிடம் திருமணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "கடந்த 10- 5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பிரிட்டாஸ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். ஒரு முறை அவர் என்னிடம், "நீங்கள் ராமரை பிரார்த்தனை செய்கிறீர்கள்.. இதனால் அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே நீங்களும் வாழ்வீர்கள் என நினைத்தேன் எனக் கேட்டார்.. அதற்கு நான் எந்தக் கடவுளையும் பிரார்த்தனை செய்வதில்லை. இதனால் நான் ராமரின் பாதையைப் பின்பற்றுவதில்லை எனச் சொன்னேன்" என்று அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

த்ரிஷா நடித்து வரும் படங்கள்

கமல் ஹாசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அவர் சூர்யாவின் 45வது படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஸ்வம்பர படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+