Trisha: ’ரிசல்ட் நம்ம பக்கம்தான்’ ரசிகர் சொன்னதுமே திரிஷா கொடுத்த ரியாக்ஷன்
திருப்பதி: நடிகை திரிஷா தனது பிறந்த நாளான இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருப்பதியில் திரிஷாவை பார்த்த ரசிகர் ஒருவர் அவரிடம் தேர்தல் ரிசல்ட் நம்ம பக்கம்தான் என்று கூறவே, திரிஷா புன்னைக்கத்துவிட்டு சென்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் தவெக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விஜய்யின் நெருங்கிய தோழியாக ரசிகர்களால் அறியப்படும் திரிஷா ரிசல்ட் நாளில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், திரிஷா காரில் பயணிப்பதும், காரின் முன்புறம் 'திருப்பதி' என்ற பெயர் பலகை இருப்பதும் தெரிகிறது. இதன்மூலம் திரிஷா திருப்பதி செல்வதை உறுதி செய்து இருந்தார்.
இந்த நிலையில், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற திரிஷாவிடம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். கோயில் வளாகத்தில் அவர் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர், "மேடம், ரிசல்ட்டு பக்கா மனதே" (இன்று ரிசல்ட் பக்காவா நம் பக்கம்தான்) என்று சொன்னார். இதனை கவனித்த திரிஷா பதிலுக்கு புன்னகைத்துவிட்டு சென்றார்.
திரிஷாவுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அவர் தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவர் தனது பிறந்தநாளையொட்டி கூட திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு சென்றுள்ளார். திரிஷாவின் பிறந்த நாளுக்கு அவருக்கு பலரும் வாழ்த்துகூறி வருகிரார்கள்.












Click it and Unblock the Notifications