Trisha: அறிவு இல்லாத அநாகரீக பேச்சு.. ”குந்தவை” பார்த்திபன் கருத்துக்கு திரிஷா கடும் கண்டனம்
சென்னை: நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு நடிகை திரிஷா மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கருத்து முட்டாள்தனமானது என திரிஷா மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார். அறிவற்ற கருத்து, பேசுபவரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது எனவும், மைக் இருப்பதால் ஒரு கருத்து அறிவு சார்ந்ததாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது எனவும் காட்டமாக நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன் திரிஷா குறித்து கூறியிருந்தது டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். மேடையில் பேசிக்கொண்டு இருந்த பார்த்தீபனிடம் நடிகைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவின் படமும் திரையில் காட்டப்பட்டது.
அவரைப்பற்றி கேட்டபோது பார்த்திபன், "குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும். சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது" என்று கூறினார்.
விஜய் - சங்கீதா விவகாரத்து
பார்த்தீபனின் இந்த கருத்து வலைத்தளங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளானது. நடிகர் விஜய் - சங்கீதா விவகாரத்து விவகாரம் திரையுலகில் மட்டும் இன்றி அரசியல் களத்திலும் பரபரப்பை கிளப்பியது. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவு இருப்பதாக மனைவி சங்கீதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சூழலுக்கு நடுவே, சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக வந்து பங்கேற்றனர். இருவரும் நீண்ட கால நண்பர் அடிப்படையில் பங்கேற்றதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் சமீபத்திய விவாகரத்து சர்ச்சைகளுக்கு நடுவே திரிஷாவுடன் விஜய் பங்கேற்றது பெரும் விவாதப்பொருளானது.
நடிகை திரிஷா கடும் கண்டனம்
இந்த நிலையில், பார்த்திபனுக்கு மறைமுகமாக நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த கருத்து முட்டாள்தனமானது எனவும் திரிஷா மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் பதிவிட்டுள்ள ட்விட் பதிவில், "அறிவற்ற கருத்து, பேசுபவரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது எனவும், மைக் இருப்பதால் ஒரு கருத்து அறிவு சார்ந்ததாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது" என காட்டமாக நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன் திரிஷா குறித்து கூறியிருந்தது டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே திரிஷா பதிவிட்டுள்ளார்.
விவாகரத்து தொடர்பாக விஜய் பதில்
நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொண்டாடியது. இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்தார். அப்போது பேசிய விஜய், இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. இது எல்லாம் வொர்த்தே இல்லை.. நீங்க இதற்காக கஷ்டப்படுகின்றதை பார்க்கும் போது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் இல்ல’ என்று பேசியிருந்தார். விஜய்யின் இந்த கருத்திற்கும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications