கயல் சீரியலில் அப்படியே அப்பட்டமாக வந்த காட்சி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. பாருங்க
சென்னை: வழக்கமாக தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் விமர்சனங்களை சந்திக்காமல் இருக்காது. ட்ரோல்களை சந்திக்காமல் இருக்காது. அந்த வகையில் கயல் சீரியலும் விதிவிலக்கு அல்ல.. சன்டிவி தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது கயல் மெகா சீரியல். இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தில் வரும் கார் பைக் காட்சியை, கயல் சீரியலில் காப்பி அடித்து வைத்துள்ளாக ட்ரோல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
சன்டிவி தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் மெகா சீரியல் டிஆர்பியில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.செல்வம் என்பவர் இத்தொடரை இயக்கி வருகிறார். இது தந்தையை இழந்த குடும்பத்தின் அனைத்து குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் மையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ட்ரோல்கள்
வழக்கமாக சீரியல்கள் விமர்சனங்களை சந்திக்காமல் இருக்காது. ட்ரோல்களை சந்திக்காமல் இருக்காது. அந்த வகையில் கயல் சீரியலும் விதிவிலக்கு அல்ல.. கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒருவர், இரண்டு ஆண்டுகளை கடந்து கர்ப்பிணியாக இருப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டதால் ட்ரோல் ஆனது. அடுத்ததாக திருமணம் கயலுக்கு எப்போது நடக்கும் என்பதே ஓராண்டுக்கு ஓட்டியதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக திருமண மண்டப காட்சிகள் கடும் விமர்சனங்களை சந்தித்தது. என்ன தான் விமர்சனங்களை நெட்டிசன்கள் வெளியிட்டாலும், பொதுமக்கள் மத்தியில் கொஞ்சமும் வரவேற்பு குறையவில்லை..
சிறகடிக்க ஆசை
இன்று வரை பல மாதங்களாக தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறது. அவ்வப்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மேலே வந்தாலும் இன்றும் கயல் தான் முதன்மையாக இடத்தில் இருக்கிறது. சைத்ரா ரெட்டிக்காகவே அந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம். தந்தையை இழந்த பெண்ணாக கயல் (சைத்ரா ரெட்டி), அவருக்கு ஆதரவாக இருக்கும் பணக்கார பையனான சஞ்சீவ் கார்த்திக், அவர்களின் இருவரின் குடும்பத்தை தாண்டி, கயலின் பெரியப்பா குடும்ப பிரச்சனை என அந்த சீரியலில் எங்கெல்லாம் பிரச்சனைகளை காட்ட முடியுமோ, அங்கேயே எல்லாம் காட்டினார்கள். சீரியல் விறுவிறுப்பு குறையாமல் சென்றது.
கயல் காப்பி காட்சி
அதேநேரம் சீரியல் பல ஆண்டுகளாக தொடர்வதால், கதையில் விறுவிறுப்பு காட்டுவதற்காக சில காட்சிகளை படங்களில் இருந்து காப்பி அடித்துள்ளதாக குற்றாச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிச்சைக்காரன் படத்தில் வரும் கார் காட்சியை அப்படியே காப்பி அடித்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஏன் டா இதுக்கு ஒரு முடிவு இல்லையா? pic.twitter.com/KBJqr06gPX
— DR. MUTHUPANDI 🔥🔥🔥 (@EkalavyaMa) June 20, 2025
சைத்ரா ரெட்டி
அதற்கு ஆதரமாக வீடியோவையும் இணைத்துள்ளார். அந்த வீடியாவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்தி ஒரு கார் மீது தெரியாமல் மோதுகிறார்கள். அதைகாரில் வந்தவர் பார்த்து, உன்னை மாதிரி ஆட்களுடன் ஒரே சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாக காரில் வருபவர் கூறுகிறார். அப்போது சஞ்சீவ் கார்த்தி, பிச்சைக்காரன் படத்தில் எப்படி விஜய் ஆண்டனி, அந்த கார் ஓனரையும் காரையும் விமர்சிப்பாரோ அதுபோல் விமர்சிக்கிறார். இப்படியாக வீடியோ ட்ரோல் வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications