நான் ஜெயித்து காட்டுறேன்.. என்னை நம்புங்கள்.. டெல்லியில் சொன்ன அண்ணாமலை.. வந்து விழுந்த ஷாக் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை நான் ஜெயித்து காட்டுகிறேன்.. என்னை நம்புங்கள் என்று டெல்லி பாஜக தலைவர்களிடம் கூறியதாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல்நாள் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்பின் கோவை வந்த நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சிலரும் சந்தித்தனர். இந்த சந்திப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 Trust me please, Annamalai say to Delhi BJP leaders on Tamil Nadu local issues

அதில், நிர்மலா சீதாராமனை திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் பார்த்தது ஏன்? இப்போதுதான் தொகுதி மேம்பாட்டிற்காக பார்க்க வேண்டுமா? இப்போதுதான் ஞான உதயம் வந்ததா? இரண்டரை வருஷம் கழித்து இப்போதுதான் ஞான உதயம் வந்ததா? இன்னொரு பக்கம் விபி துரைசாமி கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கூறுகிறார். எதோ ஒரு வகையில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டு தரப்பிலும் கூட்டணி நீடிக்க வேண்டும் என்று யாரோ நினைக்கிறார்கள். சிலர் அதை விரும்புகிறார்கள்.

எடப்பாடி கூட வேறு எதையோ நினைத்து கூட்டணியை உடைத்துள்ளார். கூட்டணி உடைந்ததற்கான வேறு எதோ காரணம் உள்ளது. அமித் ஷா - எடப்பாடி பேசியது என்ன என்று தெரியவில்லை. இது அண்ணாமலையை தூக்க எடப்பாடி செய்த டிராமாவா? அல்லது பாஜகவிற்கு தொகுதிகளை குறைக்க செய்த டிராமாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷா எடப்பாடி பழனிசாமியை தனியாக அழைத்து பேசி உள்ளார். அவர்கள் பேசியது என்ன? வேறு எதோ நடந்துள்ளது.

 Trust me please, Annamalai say to Delhi BJP leaders on Tamil Nadu local issues

இந்த டிராமாவிற்கு எல்லாம் பின்னாடி வேறு எதோ இருக்கிறது. கூட்டணி பிரிந்ததற்கு உண்மையான காரணம் இல்லை. அதனால் கூட்டணி சேரும் வாய்ப்புகள் உண்டு. அண்ணாமலை நிர்மலா சீதாராமனிடம் என்ன சொன்னார்? அதற்கு நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார் என்பது எல்லாம் தெரியவில்லை. அதிமுக நிர்வாகிகள் சிலர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். நிர்மலா சீதாராமனுக்கு இதன் மூலம் "சிலர்" மெசேஜ் அனுப்பி இருக்கிறார்களா? ஒரு விஐபி எம்எல்ஏ நிர்மலா சீதாராமனுக்கு தூது அனுப்பி உள்ளாரா?

இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன . பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் ஒருவர் நினைக்கிறார். ஒரு விஐபி எம்எல்ஏ தேர்தல் வரும் முன் இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று நினைக்கிறார். கொங்கு மண்டலத்தில் உள்ள அவர் இதை தீர்க்கமாக விரும்புகிறார். அதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இவர்கள் கூட்டணி முறிய வேறு எதோ ஒரு காரணம் உள்ளது. கூட்டணியை முறித்தால் பாஜக இறங்கி வரும். குறைந்த இடங்களை கூட்டணியில் கொடுக்கலாம் என்று நினைக்க வாய்ப்பு உள்ளது.

எடப்பாடியின் திட்டம் அதுவாக இருக்கலாம். இந்த நேரத்தில் எடப்பாடி கூட்டணியை முறிக்க வாய்ப்பு இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்க வாய்ப்புகள் இல்லை. அதனாலும் எடப்பாடி அப்செட்டில் இருக்கிறார். மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக வாக்கு வாங்குமா என்பதும் தெரியவில்லை. பாஜக இதனால் 5 மாநில தேர்தலில் தீவிரமாக வேலை செய்கிறது. இதனால் அதிமுகவை பகைத்துக்கொள்ள பாஜக விரும்பாது. இதனால் அண்ணாமலையை தற்சமயத்திற்கு அமைதியாக இருக்க சொல்வார்கள். அண்ணாமலை பதவி தனக்கு வெங்காயம் என்று சொல்வார்.

ஆனால் அண்ணாமலையை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று டெல்லிக்கு தெரியும். அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கை சென்றுள்ளது. நல்லா போனதை கெடுத்து விட்டீர்கள் என்று கூறியுள்ளனர். அண்ணாமலை நான் ஜெயித்து காட்டுகிறேன்.. என்னை நம்புங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் டெல்லியோ எங்களிடமும் ஆதாரங்கள் உள்ளன. எங்களிடம் டேட்டா உள்ளது. அதனால் நீங்கள் சொல்வதை ஏற்க மாட்டோம் என்று டெல்லி கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+