சனி பகவான் உச்சத்தில் இருக்கும் போது..வாயால் மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்! இப்போ என்ன பஞ்சாயத்து?
சென்னை: இருசக்கர வாகன விபத்தில் சிக்கியது, லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது, உதிரிபாகன விற்பனை கடைக்கு நோட்டீஸ் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய டிடிஎஃப் வாசன் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். மேலும் கார் ஓட்டும் வாசனுக்கு லைசென்ஸ் இருக்கிறதா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றியதை அடுத்து அவருக்கு பல சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

மேலும் அவரை பைக் ரைடர்களும் ஹீரோ போல கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.
டிடிஎஃப் வாசன்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டம் தான் தற்போது இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் கோயம்புத்தூரே திணறிப் போனது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான டிடிஎப் வாசனுக்கு அப்போதிருந்து தான் பஞ்சாயத்தே ஆரம்பித்தது.
பைக் ரைட்: தொடர்ந்து பல இடங்களுக்கும் பைக்கில் சென்ற டிடிஎஃப் வாசனுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அடுத்தடுத்து அபராதங்கள் விதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக காவல் நிலையங்களிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரச்சனை இருந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கினார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பைக்கில் சென்ற போது காஞ்சிபுரத்தில் அதிவேகமாக பயணித்தார் டிடிஎப்.
லைசென்ஸ் கேன்சல்: அப்போது வீலிங் செய்ய முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த டிடிஎப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் ஜாமினில் வெளிவந்த அவரது லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது. தொடர்ந்து பைக்கை ஓட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வந்த டிடிஎஃப் வாசன் தற்போது கார் ஓட்டியவாறு வீடியோ ஒன்றை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
மீண்டும் சர்ச்சை: ஏற்கனவே பிடிஎப் வாசனின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அவர் எப்படி கார் ஓட்டலாம் என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தான் அவர் கார் ஓட்டும் லைசன்ஸ் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் வேறு மாநிலங்களில் இருந்து அவர் கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
வழக்கு பாயுமா?: இந்த நிலையில் இதிலிருந்தும் புது பிரச்சனை டிடிஎஃப் வாசனுக்கு முளைத்திருக்கிறது. அதாவது காரை ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து நண்பர்களுடன் அவர் பயணித்திருக்கிறார். அதே நேரத்தில் டிடிஎஃப் வாசன் செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளதோடு போலீசாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். சனிபகவான் உச்சத்தில் இருக்கும் போது எப்படி இருந்தாலும் பஞ்சாயத்து வரும் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications