திடீர் நெஞ்சுவலியா? டிடிவி தினகரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். தற்போது பாஜக கூட்டணியில் உள்ளார். டிடிவி தினகரன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் அடிக்கடி மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறார்.

தற்போது தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் மாற்றம், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான விவாதம் என்பது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விவாதிக்க சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு வந்தார்.
சென்னை வந்துள்ள அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், இன்று அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிடிவி தினகரன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் நேற்று சென்னையில் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. மேலும் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிடிவி தினகரன் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த மாதிரியான பரிசோதனை என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications