சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதிர்க்கட்சியினர் ஒன்று கூடினால் மட்டும் ஓமிக்ரான் பரவுமோ.. கோவை உதயநிதி கூட்டத்தை விமர்சித்த டிடிவி!

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சியினர் ஒன்று கூடினால் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என யாராவது உலக மகா நிபுணர்கள் திமுக அரசுக்கு சொல்லியிருப்பார்களோ என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஓமிக்ரானால் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த நோய், பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த நிலையில் எம்ஜிஆர் நினைவுதினத்தையொட்டி (டிச. 24) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நிறைய பேர் ஒன்று கூடக் கூடாது என தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஓமிக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை - 3 நாட்கள் ஆய்வு ஓமிக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை - 3 நாட்கள் ஆய்வு

எம்எல்ஏ உதயநிதி

எம்எல்ஏ உதயநிதி

இந்த நிலையில் கோவையில் நேற்று முன் தினம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் கூட்டம் சேர்ந்தால் ஓமிக்ரான் பரவும் என அரசு சொன்னதே இப்போது மட்டும் பரவாதா என கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன்.

எம்ஜிஆர் நினைவிடம்

எம்ஜிஆர் நினைவிடம்

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?

எதிர்க்கட்சியினர்

எதிர்க்கட்சியினர்

ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Recommended Video

    2021-ல் அதிகம் Tweet செய்யப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள் யார்?| Oneindia Tamil
    திமுக மீது விமர்சனம்

    திமுக மீது விமர்சனம்

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாக பேசிவிட்டு பதவிக்கு வந்தபிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது. இவர்களின் இயலாமையை மறைக்க அன்றைக்கு திரு.கருணாநிதி செய்ததை இப்போது திரு. ஸ்டாலினும் செய்கிறார். அரசு ஊழியர் சங்க மாநாட்டில் இப்படி ஓர் அடிமை ராகத்தை அவர் இசைத்திருக்கிறார் என மற்றொரு ட்வீட்டிலும் திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    English summary
    AMMK General Secretary TTV Dhinakaran criticises DMK government for not allowing to pay tribute to MGR.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X