இப்படி பண்ணக் கூடாது.. ஏமாற்று வேலை! ’விளையாட்டு’ வினையாகி விடும்.. டிடிவி தினகரன் போட்ட கண்டிஷன்..!
சென்னை: பணி நிரவல் கலந்தாய்வு எனும் பெயரில் அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசுப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசையும், பள்ளிக்கல்வித்துறையையும் வலியுறுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை குறைக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது.

அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையின் பணி நிரவல் தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பணி நிரவல் கலந்தாய்வு எனும் பெயரில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலையிலான பணியிடங்களை குறைக்கும் முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பணி நிரவல் எனும் பெயரில் 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் போதுமானது எனவும், 700 முதல் 1500 மாணவர்கள் வரையிலான மாணவர்கள் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் போதுமானது எனவும் அறிவித்திருக்கும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்களை மேலும் குறைத்திருப்பது, அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களின் அரசுப்பணி கனவை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சிக் களமான உடற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்திருக்கும் கோரிக்கைகளுக்கு முன்பின் முரணாக செயல்படும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை, உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கவனச்சிதறலுக்கும் வழிவகுக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, பணி நிரவல் கலந்தாய்வு எனும் பெயரில் அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசுப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசையும், பள்ளிக்கல்வித்துறையையும் வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications