பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கட்சி பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ட்வீட்டர் மூலமாக, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 24, 2019
முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். திரு.அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 24, 2019
பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். திரு.அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!

Click it and Unblock the Notifications