Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA கூட்டணியில் இணைந்த அமமுக? பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம்.. அப்போ கன்பார்ம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு நடைபெற உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் தினகரன் இணைவது உறுதி ஆகியுள்ளதா என விவாதங்கள் எழுந்துள்ளன.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. இன்னும் சில கட்சிகள் எவ்வித கூட்டணியிலும் சேராமல் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த அமமுக பொதுச் செயலாளர், இந்த முறை பாஜகவும் - அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளதால் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ttv dhinakaran ammk tvk sengottaiyan

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமமுக ஆதரவின்றி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என டி.டி.வி. தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுப்போம். எந்தக் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுக தான் எனக் கூறி வருகிறார் தினகரன்.

தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி முடிவுகளை அறிவிப்போம். வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி. எங்களுக்கு புனித பூமியாக திகழ்வது ஆண்டிபட்டிதான். ஆகவே, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டியில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அண்மையில் கூறினார் டிடிவி தினகரன்.

அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணையக்கூடும் என்ற பேச்சுகள் உலவி வருகின்றன. ஆனால், அமமுகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை எனக் கூறப்பட்டது. அதேசமயம், பாஜகவுக்கு வழங்கும் சீட்களில் அமமுகவுக்கு பகிர்ந்து கொடுப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சனை இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இது ஒருபுறமிருக்க தவெக உடனும் அமமுக பேசி வருவதாக தகவல்கள் வந்தன. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெக உடன் பேசி வருவதாக செங்கோட்டையன் கூறி இருந்தார்

கடந்த ஜனவரி 5ஆம் தேதி தஞ்​சாவூரில் நடை​பெற்ற கழக செயற்​குழு மற்​றும் பொதுக்​குழுக் கூட்டத்​தில், கூட்​டணி விவ​காரத்​தில் தமி​ழ​கத்​தின் நலன் மற்​றும் கழகத்​தின் நலனை மைய​மாகக் கொண்டே கூட்​டணி அறிவிக்​கப்​படும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மதத்தின் பெயரிலோ, ஜாதியின் பெயரிலோ, கடவுளின் பெயரிலோ பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, டெல்லியில் அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன.

கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவை அதிமுக கூட்டணிக்கு வரும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வரும் ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் மேடையேற உள்ளனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தின் வரவேற்பு பேனரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் ஏற்கனவே வெளியேறிய நிலையில், மீண்டும் இணைந்ததாக அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி.ஏ கூட்டணி பேனரில் டிடிவி தினகரன் படம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+