டிஜிபி ஒன்னு சொல்றாரு, அமைச்சர் இன்னொன்று சொல்றாரு.. தமிழகத்தில் என்னதான் நடக்குது.. டிடிவி சுளீர்
சென்னை: நாளை இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டிஜிபி தடை விதிக்கிறார், அதே நாளில் இரவு 12 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறநிலையத் துறை அமைச்சர் சொல்கிறார். இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்களே தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஓமிக்ரான் சமூக பரவலாகிவிட்டதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் சென்னையில் ஓமிக்ரான் அதிகம் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 45 பேருக்கு ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளதால் அந்தந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்
அது போல் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அத்தியாவசிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

சுவாமி தரிசனம்
இதனால் கோயில்களில் புத்தாண்டு அன்று சுவாமி தரிசனத்திற்கு ஏதேனும் தடை விதிக்கப்படுமா என மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு எந்த தடையும் இல்லை. நாளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயில்களுக்கு செல்லலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார். ஆனால் அமைச்சரோ கோயில்களுக்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

கோயில்களில் அனுமதி
அருகில் உள்ள கோயில்களுக்கு நடந்து செல்லலாம். தூரத்தில் இருக்கும் கோயில்களுக்கு இரு சக்கர வாகனத்தில்தான் செல்ல வேண்டும். எனவே இருவரது அறிவிப்புகளும் முரண்பாடாக உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாளை (31.12.2021) இரவு 12.00 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டி.ஜி.பி தடை விதிக்கிறார்.

நிதியமைச்சர்
அதே நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சொல்கிறார். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்!

என்னதான் நடக்கிறது
தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை! என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications