அமமுக - தவெக கூட்டணியா? "டிசம்பர்ல பாருங்க".. வந்து விழுந்த கேள்விக்கு டிடிவி தினகரன் அதிரடி பதில்!
சென்னை: தவெக கூட்டணியில் அமமுக இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜகவுடன் ஏற்கனவே டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வரும் நிலையில், அமமுக கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி நிலவி வருகிறது.

டிடிவி தினகரன் பேட்டி
இந்தசூழலில் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்று உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரன் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "தமிழகம் வரும் பிரதமரை இந்த முறை நான் சந்திக்கவில்லை. அமமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்." என்றார்.
காலம் இல்லை, நான்தான் பதில் சொல்வேன்
ஓபிஎஸ்ஸை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு காலம் கடந்து விட்டது எனவும் டிடிவி தினகரனை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என்றும் பேட்டி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தினகரன், "எடப்பாடி பழனிசாமி உடன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லாது, உரிய நேரத்தில் நான் பதில் சொல்வேன். ஆறு மாதத்திற்கு பின் எல்லாம் இறுதியான பிறகு தெரியவரும்." என்றார்.
மேலும் பேசிய டிடிவி தினகரன், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிபந்தனையற்ற ஆதரவுடன் சேர்ந்திருக்கிறோம், தேர்தல் வரப்போகிறது, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம்" என்றார்.
கூட்டணி ஆட்சி?
"பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியா?" என்ற கேள்விக்கு பதில் அளித்த தினகரன், "முதல்முறையாக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள், ஆட்சி அதிகாரங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கும்போது தான் ஊழலற்றத் திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்ற முடியும்" எனத் தெரிவித்தார்.
"அதிமுகவினர் தனித்து ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்களே" என்ற கேள்விக்கு, "நான் ஏற்கனவே கூறியுள்ளேன், அமித் ஷாவின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடு. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை" எனக் கூறினார்.
தவெக கூட்டணி?
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், கூட்டணிக்கு கட்சிகளை அழைப்பதாகவும் கூறுகின்றனர், தவெக கூட்டணியில் அமமுக இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, "யூகங்களுக்கு எல்லாம் நான் ஜோசியம் பார்த்து பதில் சொல்ல முடியாது. இன்னும் 6 மாதம் பொறுங்கள். டிசம்பர் - ஜனவரி மாதத்தில் எல்லா கூட்டணிகளிலும் இறுதிக்கட்ட நிலை வந்துவிடும். 2026 சட்டசபை தேர்தலில் உறுதியாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்து விடுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications