கடைசி நேரத்தில் ‘செக்’ வைக்க முயன்ற டிடிவி தினகரன்.. ‘அந்த கடிதம்’.. முறியடித்து பதவியேற்கும் விஜய்!
சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் நாளை (மே 10) தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இருப்பினும், இந்தப் பதவியேற்பைத் தடுக்கும் வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேற்கொண்ட கடைசி நிமிட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவிய இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வராகப் பதவியேற்கிறார். ஆனால், இந்தப் பயணத்தை அவ்வளவு எளிதாக இருக்கவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த டிடிவி தினகரனின் வியூகங்கள் இறுதியில் பலன் அளிக்கவில்லை.

அந்த ஒரு கடிதம் ஏற்படுத்திய பரபரப்பு
ஆளுநர் மாளிகையில் விஜய் தனது ஆதரவு கடிதங்களை நேற்று சமர்ப்பித்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அமமுக-வின் சார்பில் மன்னார்குடியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான எஸ். காமராஜ், விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக தவெக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் போலியானது என்று தினகரன் குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவித்தது. இந்தச் சூழலில் தினகரன், ஆளுநரைச் சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். தனது கட்சியின் ஆதரவு கடிதத்தையும் இதற்காக அவர் வழங்கினார். தனது கட்சி எம்.எல்.ஏவின் ஆதரவுக் கடிதம் என ஒன்றைக் கொடுத்ததால் எப்படியாவது விஜய் தலைமையிலான ஆட்சி அமைவதைத் தடுத்துவிடலாம் என டிடிவி தினகரன் முயற்சி செய்தார்.
420 வேலை - சீறிய தினகரன்
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடுவதாக தவெக வெளியிட்ட வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது. காமராஜ் கையெழுத்திடும் வீடியோ உண்மை எனில் அந்த ஒரிஜினல் வீடியோ எங்கே? காமராஜ் காரில் கையெழுத்திடுகிறார் எனில் அவரை வீடியோ எடுத்தது விஜய்யா? ஆதவ் அர்ஜூனா? சிடி நிர்மல்குமாரா? செங்கோட்டையனா? முதலமைச்சராவதற்கே இத்தனை ஃபோர்ஜரி, 420 வேலை செய்கிறீர்கள்.. ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்னரே இத்தனை திமிராக அகம்பாவமாக செயல்படுகிறார் விஜய்.. விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேரழிவு. விஜய் கொடுத்திருக்கும் அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் அர்லேகர் ஆராய வேண்டும் எனச் சீறினார் தினகரன்.
கைகொடுத்த விசிக மற்றும் இடதுசாரிகள்
டிடிவி தினகரன் ஒருபுறம் முட்டுக்கட்டை போட முயன்றாலும், மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் இடதுசாரி கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தன. குறிப்பாக, விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களும் விஜய்க்கு ஆதரவு அளித்ததோடு, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆதரவு கடிதத்தை வழங்கினர். இதன் மூலம் விஜய்யின் பலம் 120 ஆக உயர்ந்தது.
ஆளுநர் அதிகாரப்பூர்வ அழைப்பு
டிடிவி தினகரனின் புகார்கள் மற்றும் இழுபறிகள் காரணமாக நான்கு முறை ஆளுநரைச் சந்திக்க வேண்டிய சூழல் விஜய்க்கு ஏற்பட்டது. இறுதியாக, தவெக சமர்ப்பித்த ஆதரவு கடிதங்கள் மற்றும் மெஜாரிட்டி எண்களை உறுதி செய்த ஆளுநர் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க முறைப்படி அழைத்துள்ளார்.
டிடிவி தினகரனின் குதிரை பேர முயற்சி குற்றச்சாட்டு மற்றும் சட்ட சிக்கல்கள் அனைத்தையும் கடந்து, "தமிழகத்தின் புதிய சரித்திரம்" எனத் தனது ஆதரவாளர்களால் போற்றப்படும் வகையில் விஜய் நாளை அரியணை ஏறுகிறார்.
விஜய் பதவியேற்பு விழா நாளை மே 10, காலை 10:00 மணிக்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்











Click it and Unblock the Notifications