எடப்பாடி சிஎம்னு சொன்னதுமே.. எடுத்தாரு பாருங்க செம்மலை ஓட்டம்! கூவத்தூர் ரகசியத்தை சொன்ன டிடிவி
சென்னை: எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூவத்தூரில் நடந்த சில விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றதுமே செம்மலை சுவர் ஏறி குதித்து ஓடினார் எனவும், நான் தான் முதலமைச்சர் என்று சொன்னால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமியே கூறியதாக கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. எடப்பாடி வந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும்.
இதை அடுத்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்களை சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில் அவரது பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.

அதிமுக பரபரப்பு
இப்படி பரபரப்பான நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறிக் கொண்டிருக்க, இன்று அதிகாலையில் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். அதிமுக கட்சி அலுவலகத்தை உடைத்த கைக்கூலிகள், ஆட்சியை கவிழ்க்க 18 எம்எல்ஏக்களை கடத்திய துரோகிகள் என ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
டிடிவி தினகரன்
இந்த நிலையில் அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளரும் அதிமுக முன்னாள் துணை பொது செயலாளருமான டிடிவி தினகரன். குறிப்பாக கூவத்தூரில் நடந்த சில விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருப்பது அதிமுகவின் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சையில் பேசிய அவர், "துரோகத்திற்கு மறுபெயர் என்றாலே அது எடப்பாடி பழனிசாமி தான். துரோகத்தை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. அவர் எல்லாம் நன்றியைப் பற்றி பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியை கலைக்க முயன்ற போது பாஜக காப்பாற்றியதாக பேசுகிறார். அது பொய். திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது அவரை பாஜக காப்பாற்றவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான் காப்பாற்றினார்கள். கூவத்தூரில் எம்எல்ஏக்களை தங்க வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதற்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்போது கூட நான் தான் முதல்வர் என்ன சொன்னால் எம்எல்ஏக்கள் கையெழுத்து போட மாட்டார்கள் என பயந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
செம்மலை
அனைத்து அதிமுக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கிய பிறகு அதை சொல்லுங்கள் என்றார். அப்போதைக்கு எடப்பாடி முதல்வராக கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் என்றதும், செம்மலை சுவர் ஏறி குதித்து ஓடினார். இப்படி சென்றவர்களை எல்லாம் பாதுகாத்து வைத்து அவர்கள் வாக்களித்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஆனால் அந்த நன்றியைத் தான் எடப்பாடி மறந்து விட்டார்" எனக் கூறியிருக்கிறார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications