புண்படுத்திட்டாருங்க..பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் ஓபிஎஸ்! விடாமல் அடிக்கும் டிடிவி
மயிலாடுதுறை: திமுகவை வலுவாக எதிர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனவும், ஓ.பன்னீர்செல்வம் இதுவரை பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், ஓபிஎஸ் அவர்கள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் அதற்காக அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம் எனவும் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் நடைபெற்ற அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," வரும் சட்டமன்ற தேர்தலில் ராஜ்யசபா தேர்தலிலோ நான் போட்டியிட மாட்டேன். ஓபிஎஸ் அவர்கள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் அதற்காக அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

டிடிவி தினகரன் பேச்சு
ஆனால் சட்டமன்றத்தில் அவரது ஆசி பெற்ற ஐயப்பன் அவர்கள் பேசியது எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. புரட்சித் தலைவர் திமுக என்கிற தீய சக்தியை எதிர்த்து தான் கட்சி நடத்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கி எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தவரை 15 ஆண்டுகள் ஆட்சிக்கு வராமல் திமுகவை தடுத்து வைத்திருந்தார்.
ஓபிஎஸ் மீது விமர்சனம்
அதன் பிறகு திமுகவை வலுவாக எதிர்த்த ஒரு அரசியல் சக்தி அம்மா அவர்கள். இப்படிப்பட்ட நிலையில் சட்டமன்றத்திலே எம்ஜிஆர் அவர்கள் ஆசியும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியோடு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராவார் என தெரிவித்தார். இது மிகவும் வேதனைக்கு உரியது கண்டனத்திற்கு உரியது. பன்னீர்செல்வம் இதுவரை பசுந்தோல் போர்த்திய புலியாக இதுவரை இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது எவ்வளவு வக்கிர மனம் இருந்தால் எவ்வளவு குரோத மனம் இருந்தால் புரட்சித் தலைவரையும் அம்மா அவர்களின் தொண்டர்களையும் இழிவுபடுத்தி விட்டார் என்பதுதான் எங்கள் வருத்தம்.
பிரதமர் மோடி
இந்தியாவை உலக நாடுகளிலேயே வல்லரசு நாடாக வளர்ந்து வரும் நாடாக பிரதமர் மோடி உழைத்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலக நாடுகளிலேயே வளர்ந்த நாடுகள் போட்டி போடும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி தான். உலக நாடுகளைச் ஐநா சபை பிரதிநிதிகள் கலந்து கொள்கிற ஏ ஐ மாநாட்டில் காங்கிரஸ் இவ்வளவு கீழ்த்தரமாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.. எதிர்ப்பை பதிவு செய்வதற்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறுமான கதையாக தான் போய் உள்ளதற்கு காரணம். அவர்களது இழிவான செயல்பாடுகள்தான்.
என்.டி.ஏ கூட்டணி
தமிழகத்தில் மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. திமுக ஆட்சியில் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா பழக்கம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளி மாணவர்களே கஞ்சா பயன்படுத்தும் அளவிற்கு குட்டிசுவராகிவிட்டது. நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். நான் என்.டி.ஏ (NDA) கூட்டணியில், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறேன். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை.
பாஜக கூட்டணி
நாங்கள் பாஜக கூட்டணியில் இணைந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஜெயலலிதா அவர்கள் 1999 தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அம்மா சொன்னது உண்மைதான். ஆனால், 2004-ல் வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இணைந்ததே! ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள். இப்போது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.
நாங்கள் எல்லாம் அண்ணன் தம்பிகள், ஒரே அணியில் வந்தவர்கள். தொகுதிகள் பங்கீடு குறித்து பாஜக உடன் பேசுவேன் அதற்கான நேரம் இருக்கிறது. இப்போது கூட்டணி பலமாக இருக்கிறது. நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications