தேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி
Recommended Video
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதனை டிடிவி தினகரன் கண்டிக்க வேண்டும் என கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றது. இதில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும், தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து 4 சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு, வெற்றி பெற செய்வோம். எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
4 தொகுதிகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். குற்ற பின்னணி கொண்டவர்கள் தனி அமைப்பை தொடங்கி பல்வேறு அவதூறுகளை, தேச விரோத, சமூக விரோத செயல்களை பரப்பினர். இதனை எதிர்கொண்டு தேர்தலை எதிர்கொண்டோம். இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
காவல் துறையினருக்கு யார் தவறு செய்கிறார்கள் என்று தெரியும். இவர்களை தூண்டியவர்களை காவல் துறையினர் கைது செய்து மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதனை டிடிவி தினகரன் கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications