திடீரென ஆளுநர் அர்லேகரை சந்தித்த டிடிவி தினகரன்.. ராஜ்பவன் வாசலில் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து இருக்கிறார். ஏற்கனவே ஆளுநரிடம் குதிரை பேரத்திற்காக அமமகவை சேர்ந்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தவெகவினர் கடத்தியதாக டிடிவி தினகரன் புகார் அளித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்துள்ளார். அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் தவெகவில் இணைய தயாராகிவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருந்தார். ஏற்கனவே அதிமுகவின் 6 எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.

TTV Dhinakaran

இதனால் தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் தவெக தரப்பில் அவர்களாகவே விரும்பி தவெகவில் இணைவதாக பதில் அளிக்கப்பட்டது. அதேபோல் அமமுக எம்எல்ஏ காமராஜ் சட்டசபையில் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முதல்வர் விஜய், எம்எல்ஏக்களுக்கு கார் அறிவித்த போது கூட காமராஜ் வரவேற்று இருந்தார்.

ஏற்கனவே அமமுக எம்எல்ஏ காமராஜை குதிரை பேரத்திற்காக தவெகவினர் கடத்தியதாக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திடீரென பொறுப்பு ஆளுநர் அர்லேகரை டிடிவி தினகரன் நேரில் சந்தித்திருக்கிறார். இது விவாதமாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் அர்லேகர் உடனான சந்திப்பு ஏன் என்று டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன், ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் நிச்சயமாக சொல்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். இதனால் குதிரை பேர தொடர்பாக மீண்டும் ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார் அளிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் டிடிவி தினகரன் பேசும் போது, அதிமுகவினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதேபோல் அதிமுக, அமமுக வேறு வேறு கிடையாது.. அதிமுக உடன் தான் அமமுக இருக்கிறது என்றும் கூறினார். இதனால் டிடிவி தினகரன் அதிமுகவில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+