Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நலவாரியம் அமைப்போம்னு ஸ்டாலின் சொன்னது என்னாச்சு? ஓலா டிரைவர்கள் போராட்டத்தை பாருங்க: டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஊதிய உயர்வு, பைக் டாக்சி தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோவை, திருச்சி, மதுரையிலும் போராட்டம் நடத்த ஒலா, ஊபர் ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர்.

TTV Dhinakaran urges tn government should take immediate steps to fulfill the demands of Ola, Uber drivers

ஓலா, ஊபர் டிரைவர்களின் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர், கால் டாக்சி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+