விஜய்க்கு அமமுக ஆதரவு? ரெடியான மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்.. டிடிவி தினகரன் எடுக்கும் பெரிய முடிவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்றாலும் கூட விஜய்யின் தவெக ஆட்சியமைக்க இன்னும் 11 இடங்கள் தேவையாக உள்ளது. இதனால் பிற கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள அமமுகவின் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்க ரெடியாக இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. இதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்றது. தனிப்பெரும் கட்சியானது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதனால் தவெகவிற்கு இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தவெகவின் பலம் 107 ஆக குறைவதோடு மெஜாரிட்டிக்கு தேவையான எம்எல்ஏக்களின் பலம் 11 ஆக அதிகரிக்கும்.
மெஜாரிட்டி பெற தவெக முயற்சி
இந்நிலையில் தான் 11 எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற விஜய் துடித்து வருகிறார். காங்கிரஸ், விசிக, பாமக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுகளை பெற தவெக காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள், பாமகவிற்கு 4 எம்எல்ஏக்கள், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவிற்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் தற்போது தமிழகத்தில் 'நம்பர்ஸ் கேம்' தொடங்கி உள்ளனர்.
அமமுக எம்எல்ஏ காமராஜ்
தவெக தலைவர் விஜய் எப்படி மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெறுகிறார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டசபை தொகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவை வீழ்த்தி அமமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
தவெகவிற்கு ஆதரவு?
மன்னார்குடி தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் டிஆர்பி ராஜா 66,850 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காமராஜ் மொத்தம் 68 ஆயிரத்து 416 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். டிஆர்பி ராஜாவை 1,566 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜராஜன் 44,266 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் தான் காமராஜ், விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் வெளியாகும் அறிவிப்பு
அமமுக இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தாலும் கூட தங்களது கட்சியின் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிட்டது. அமமுக ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் வேட்பாளர் காமராஜ் சுதந்திரமாக முடிவெடுத்து தவெகவை ஆதரிக்கலாம். இதன்மூலம் அவரை தகுதி நீக்கம் செய்யவோ எதுவும் முடியாது.
ஆனால் காமராஜ், டிடிவி தினகரனின் விசுவாசி. இதனால் கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரிடம் ஆலோசனை பெற்று அவரது முடிவை பின்பற்றி தனது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் பற்றி அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் டிடிவி தினகரன் விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications