தனி அறையில் தங்கதமிழ்ச் செல்வனை செம டோஸ் விட்ட டிடிவி தினகரன்?.. ஆடியோ ரிலீஸின் பரபரப்பு தகவல்
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் குறித்து தங்கதமிழ்ச் செல்வன் ஆடியோ வெளியாவதற்கு முன்பே அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக திட்டியதாகவும் அதன் வெளிபாடே தங்கதமிழ்ச் செல்வன் ஆடியோவில் வெளிப்படுத்தியது என்றும் கூறப்படுகிறது.
தேனி மக்களவை தொகுதியில் தங்கதமிழ்ச் செல்வன் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் கட்சி மீதும் தினகரன் மீதும் பல்வேறு நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூருக்கு சசிகலாவை பார்க்க தினகரன் சென்றிருந்த போதும் அவருடன் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் டிடிவி தினகரனுக்கு தங்கதமிழ்ச் செல்வன் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

ஆடியோ
இது நாளடைவில் மோதலாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் டிடிவி தினகரனை அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்கதமிழ்ச் செல்வன் மிகவும் அவதூறான வார்த்தைகள் மூலம் வசைபாடிய ஆடியோ நேற்று முதல் வைரலாகி வருகிறது.

பாயுமா
இந்த நிலையில் இன்றைய தினம் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் தங்கதமிழ்ச் செல்வன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கதமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை பாயுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தகவல்கள்
இந்த நிலையில் அமமுகவில் நிர்வாகம் சரியில்லை என்றும் நெல்லை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பாளர்களால் கட்சி அழிந்து வருகிறது என்றும் தங்கதமிழ்ச் செல்வன் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். இதையடுத்து தங்கத்தமிழ்ச் செல்வனை தனியாக அழைத்து தினகரன் பேசியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பொறுப்பு இல்லை
அந்த சந்திப்பில் இந்த இருவர் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. சந்திப்பின் போது தேனி மாவட்டத்தில் தினகரன் கடுமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியதாக தெரிகிறது. வெகு விரைவில் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதாகவும் அச்சமயம் உங்களுக்கு (தங்கதமிழ்ச் செல்வன்) எந்த பொறுப்பும் வழங்கப்படாது.

அதிருப்தி
உங்களிடம் உள்ள கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பும் பறிக்கப்படும். எனவே நீங்கள் எந்த முடிவை எடுக்க வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என டிடிவி தினகரன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்தே தங்கதமிழ்ச் செல்வனை அழைக்காமல் தேனியில் தினகரன் தரப்பு கூட்டம் கூட்டியதாகவும் இந்த கோபம்தான் ஆடியோவில் அதிருப்தியாக வெளியானதாகவும் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications