நீட் தேர்வு ரத்து என கூறும் ராகுல்.. மேகதாது கட்ட மாட்டோம் என அறிவிப்பாரா.. தினகரன் கேள்வி
சென்னை: நீட் தேர்வு ரத்து என சொல்லும் ராகுல்காந்தி மேகதாது அணை கட்ட மாட்டோம் என சொல்வாரா? என்று டிடிவி தினகரன் கேள்வியெழுப்பினார்.
சென்னையை அடுத்த தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தாம்பரம் நாராயணனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் மக்களோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். கடந்த 20 நாட்களாக தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வருகிறேன். ஜெயலலிதாவின் வாக்கு வங்கி எங்களிடம் உள்ளது.

ஆட்சி
அதனால் கூட்டணி இல்லாமல் மக்களோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்பிக்கள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்வார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை ஏமாற்றி விட்டார். அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என நினைக்கிறார்.

அமோக ஆதரவு
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் சட்டபேரவை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியடையும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி
ஆர்கே நகரில் வெற்றி பெற்றது போல நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டபேரவை இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்.
8 வழி சாலை திட்டத்தை ஆதரித்தவர் மு.க. ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாஜகவுடன் சேருவார் .திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.

அமமுக
தமிழக உரிமைகளை நாங்கள் யாருக்கும் பயப்படாமல் கேட்டு பெறுவோம். மோடிக்கு நாங்கள் என்றும் பயப்படமாட்டோம். மோடிக்கு பயப்படாததால்தான் எங்களுக்கு சின்னம் கிடைக்கவில்லை. சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டாலும் ஆர் கே நகரில் பெற்றது போல மாபெரும் வெற்றியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெறும்.

கர்நாடகத்தில் வெற்றி
ராகுல் காந்தி தமிழகத்தில் நீட் ரத்து செய்யப்படும் என பிரச்சாரம் செய்கிறார். மேகதாது அணை கர்நாடகத்தில் கட்டப்படாது என சொல்ல தயாரா நிச்சயமாக சொல்லமாட்டார். காரணம் அப்படி சொன்னால் கர்நாடகத்தில் வெற்றி பெற முடியாது.

ஜெ. அறிவித்த திட்டங்கள்
காங்கிரஸ் பாஜக அணியினருக்கு வாக்களிக்காதீர்கள். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார் டிடிவி தினகரன்.
-
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications