ஆட்சிக்கு வந்தாலே சென்னையை சிங்காரிக்கிறோம்.. கூவத்தை தூய்மையாக்குகிறோம்னு கிளம்பிடறாங்க.. தினகரன்
சென்னை: சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் காலம் காலமாக வசித்தவர்களை வெளியேற்றியதற்கு திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் குடிசையில் வசிக்கும் ஆதித்தமிழ்க் குடிகளின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
திமுக அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கண்டனம் தெரிவித்த திருமாவளவன்
இதுகுறித்து எம்பி திருமாவளவன் கூறுகையில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் வெளியேற்றப்பட்டு வரும் 23 குடும்பங்களுக்கும் புளியந்தோப்பு பகுதியில் வீடுகளை அரசு ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையின் பூர்வீக குடிகளை வெளியேற்றுவது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர்
இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மாநகரங்களை அழகுபடுத்துவதாக கூறி தலைமுறை, தலைமுறையாக அங்கே வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்களை வெளியேற்றும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர்
சென்னை, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆரம்பித்திருக்கிற இந்த அதிகார அத்துமீறல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தங்களை வளப்படுத்திக் கொள்ள சென்னையைச் சிங்காரிக்கிறோம், கூவத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள்.

இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள்
இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்? தமிழகத்தில் இனி வேறெங்கும் இதுபோல் நடக்கக்கூடாது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications