டிடிவி தினகரனுக்கு என்னாச்சு.. சட்டசபை பக்கமே ஆளைக் காணோமே!
டிடிவி தினகரன் இன்றைய சட்டசபை கூட்டத்துக்கு வரவில்லை
Recommended Video
சென்னை: என்ன ஆச்சுன்னே தெரியவில்லை.. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்றைக்கு சட்டசபைக்கு வரவே இல்லை.
சட்டசபை எப்போது நடந்தாலும் சரி, ஜெயலலிதா ஒட்டுமொத்த மீடியாவையும் தன் மீதே வைத்திருப்பர். அவையில் யார் பேசினாலும் சரி, எல்லா மீடியாவும் அவர் மீதே ஃபோகஸ் ஆகி கொண்டிருக்கும்.
அந்த மாதிரிதான் ஆர்கே நகரில் வெற்றி பெற்று, தினகரன் சட்டசபைக்கு போனபோதும் நடந்தது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
ஆனால் தினகரன் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் நாள் முழுவதும் சட்டப்பேரவை நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தார்.

வெளிநடப்பு
அப்போது அவருக்கென்று 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் கூட யாருமே இல்லாமல் தன்னந்தனியாக உட்கார்ந்து கெத்து காட்டினார். இதற்கு முன்பு கூட, எதிர்க்கட்சியாக இருந்தாலும் வெளிநடப்பு செய்யாமல், தன் உரையை ஆற்றிவிட்டுதான் வெளியே வந்தார்.

விலகல்
அப்படிப்பட்ட தில்-லான தினகரன் இன்று அவைக்கு வரவே இல்லை. தொடர்ச்சியான தோல்விகள், கோர்ட், கேஸ்களில் எதிரான தீர்ப்புகள், அதிகரிக்கும் நிர்வாகிகளின் விலகல்கள் போன்றவைகளால் தினகரன் நிலைகுலைந்தே போய்விட்டார் போலும்.

சோர்ந்து விட்டாரா?
எவ்வளவு தோல்விகள், சங்கடங்கள், நெருக்கடிகள் வந்தாலும், அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் பேட்டி தரும் தினகரன், இன்று ஏன் அவைக்கு வரவில்லை? உண்மையிலேயே நம்பியவர்கள் கைவிட்டதால் சோர்ந்து போய்விட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.

சந்திப்பு?
அதே சமயம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவிடம் அளித்து தினகரன் ஒப்புதல் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications